இந்திய அணி துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பிரதமர் தங்களை ஊக்கப்படுத்தியதாகவும், அனைவருக்கும் உத்வேகமாக இருந்ததாகவும் கூறினார். இன்று எல்லாத் துறைகளிலும் பெண்கள் சிறப்பாகச் செயல்படுவதற்கு பிரதமர் மோடியே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
'தொடர் நாயகி' விருது வென்ற தீப்தி ஷர்மா, பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் காத்திருந்ததாகக் கூறினார். 2017-ல் நடந்த சந்திப்பையும், அப்போது கடினமாக உழைக்குமாறும், தங்கள் கனவை அடைய முடியும் என்றும் பிரதமர் கூறியதை அவர் நினைவு கூர்ந்தார்.
ஜெய் ஸ்ரீ ராம் என பச்சைக்குத்திய தீப்தி
தீப்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று எழுதியதையும், அவரது கையில் அனுமன் பச்சை குத்தியிருந்ததையும் பிரதமர் குறிப்பிட்டார். அது தனக்கு வலிமை அளிப்பதாக தீப்தி கூறினார். எப்போதும் நிகழ்காலத்தில் எப்படி இருக்க முடிகிறது என்று ஹர்மன்ப்ரீத் பிரதமர் மோடியிடம் கேட்டார். அதற்கு, அது தனது வாழ்வின் ஒரு பகுதியாகி, பழக்கமாகிவிட்டது என்று அவர் பதிலளித்தார்.