ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியோடு காணாமல் போன வீரர்கள்: சர்ச்சையோடு வெளியேறிய ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்!

First Published | Sep 3, 2024, 8:15 PM IST

ஐபிஎல் தொடரானது ஒவ்வொரு ஆண்டும் பிசிசிஐ மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரில் இடம் பெற வேண்டும் என்பது ஒவ்வொரு வீரர்களின் கனவு. ஆனால் சில வீரர்கள் ஒரு போட்டியோடு காணாமல் போய்விட்டனர்.

IPL 2025

அதிக பணக்கார தொடர் எது என்றால் அது ஐபிஎல் தான். இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரானது ஒவ்வொரு ஆண்டும் பிசிசிஐ மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரில் இடம் பெற வேண்டும் என்பது ஒவ்வொரு வீரர்களின் கனவு. காரணம், இந்த தொடரில் இடம் பெற்றால் எப்படியும் பணக்காரர்களாக ஆகிவிடலாம். கோடீஸ்வர தொடர் எது என்றால் அது ஐபிஎல் தான்.

அப்படிப்பட்ட இந்த ஐபிஎல் தொடரில் அறிமுக போட்டியோடு காணாமல் போன கிரிக்கெட் வீரர்கள் யார் யார் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க.

Shoaib Akhtar

சோயப் அக்தர்:

ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் சோயப் அக்தர் 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் அறிமுக சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார். இந்த தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக 11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ஆனால், சர்ச்சை காரணமாக அதன் பிறகு ஐபிஎல் தொடரில் இடம் பெறவில்லை.

Tap to resize

Andre Nel

ஆண்ட்ரே நெல்:

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்ற ஆண்ட்ரே நெல் ஒரேயொரு போட்டியில் மட்டும் இடம் பெற்று விளையாடினார். அனைவரது கவனம் ஈர்க்காததால் அதன் பிறகு காணாமல் போனார்.

Brad Haddin

பிராட் ஹாடின்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்ற பிராட் ஹாடின் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் 11 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காததால் ஒரே ஒரு போட்டியோடு ஐபிஎல் தொடரிலிருந்து நடையை கட்டினார்.

Younis Khan

யூனிஸ் கான்:

பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரமான யூனிஸ் கான் 2008 ஆம் ஆண்டு அறிமுக சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று 7 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

Mashrafe Mortaza

மஷ்ரஃப் மோர்டாசா:

வங்கதேச அணியின் முன்னாள் கேப்டனான மஷ்ரஃப் மோர்டாசா 2009 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார். அவர் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 26 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி கொடுக்கவே ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து வாய்ப்பை இழந்தார்.

Mohammad Ashraful

முகமது அஷ்ரஃபுல்:

வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஷ்ரஃபுல் 2009 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார். ஆனால், மோசமான ஃபார்மை வெளிப்படுத்திய நிலையில், ஒரே ஒரு போட்டியோடு வெளியேறினார். அவர் 10 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Damien Martyn

டேமியன் மார்ட்டின்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் டேமியன் மார்ட்டின் 2009 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த போட்டியில் 24 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார்

Latest Videos

click me!