பாகிஸ்தான் முகத்தில் கரியை பூசிய வங்கதேசம் – சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் ஆன பாக்!

First Published | Sep 3, 2024, 4:42 PM IST

வங்கதேசம், பாகிஸ்தானை டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் டெஸ்டில் இவ்வளவு பெரிய தோல்வியைத் தழுவியது இதுவே முதல் முறை.

Pakistan vs Bangladesh Test

வங்கதேசம், பாகிஸ்தானை டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முழுமையாக வீழ்த்தியுள்ளது. பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் டெஸ்டில் இவ்வளவு பெரிய தோல்வியைத் தழுவியது இதுவே முதல் முறை. வங்கதேசம் முதல் முறையாக ஒரு ஆசிய அணியை அதன் சொந்த மண்ணில் முழுமையாக வீழ்த்தியுள்ளது. இந்தத் தோல்வியை பாகிஸ்தானும், உலக கிரிக்கெட் ரசிகர்களும் இன்னும் பல ஆண்டுகளுக்கு நினைவில் வைத்திருப்பார்கள்.

PAK vs BAN Test

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேசம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

இரு அணிகளும் மோதிய 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில் முதல் முறையாக வங்கதேசம் வெற்றி பெற்றது. இதன் மூலமாக வங்கதேசம் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியில் தோற்றதன் மூலமாக பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் முதல் முறையாக தோற்றது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது.

Latest Videos


PAK vs BAN 2nd Test Cricket

இதில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 262 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் 138 ரன்கள் குவித்தார். மெஹிடி ஹசன் மிராஸ் 78 ரன்கள் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது. 12 ரன்கள் முன்னிலையில் 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஒரே அடியாக சரண்டரானது. இதில் முகமது ரிஸ்வான் 43 ரன்கள் எடுத்தார். அகா சல்மான் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Pakistan vs Bangladesh Test Cricket

அதன் பிறகு 185 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு வங்கதேச அணியில் விளையாடியது. ஜாகீர் ஹாசன் 40 ரன்களும், ஷத்மான் இஸ்லாம் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் நஜ்முல் ஹூசைன் சாண்டோ 38 ரன்களும், மாமினுல் ஹக் 34 ரன்கள் எடுத்து நடையை கட்டினார்.

இதையடுத்து, முஷ்தாபிஜூர் ரஹிம் 22 ரன்களும் எடுக்க, ஷாகிப் அல் ஹசன் 21 ரன்களும் எடுக்கவே வங்கதேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பெற்றது.

Pakistan vs Bangladesh 2nd Test

முதல் முறையாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வங்கதேசம் 2-0 என்று வீழ்த்தி புதிய சாதனை படைத்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து இந்தியா வரும் வங்கதேசம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 19 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

PAK vs BAN 2nd Test

இதற்கு முன்னதாக இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய 13 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 11 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. 2 போட்டி டிராவில் முடிந்த நிலையில் ஒரு போட்டியில் கூட வங்கதேசம் வெற்றி பெறவில்லை. சென்னையில் நடைபெறும் போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றால் அது வரலாற்று சாதனையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!