பேர கேட்டாலே ஸ்டெம்பு எகிறுமுல – அதிக Clean Bowled விக்கெட்டுகள் கைப்பற்றிய ஜாம்பவான்கள்!

Published : Oct 14, 2024, 06:23 PM ISTUpdated : Oct 14, 2024, 06:26 PM IST

Most Clean Bowled Wickets: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கிளீன் போல்டு மூலம் கைப்பற்றிய பந்து வீச்சாளர்கள் பட்டியல். கபில் தேவ் முதல் வாசிம் அக்ரம் வரை பல ஜாம்பவான்கள் இடம்பெற்றுள்ளனர்.

PREV
110
பேர கேட்டாலே ஸ்டெம்பு எகிறுமுல – அதிக Clean Bowled விக்கெட்டுகள் கைப்பற்றிய ஜாம்பவான்கள்!
Clean Bowled, Top 5 Bowlers Who Have Taken Most Clean Bowled Wickets

Most Clean Bowled Wickets: கிரிக்கெட்டில் முடியாதது என்று எதுவும் இல்லை. சாதனைகள் இல்லாத போட்டியும் இல்லை. சாதனை படைக்காத கிரிக்கெட் வீரர்களும் கிடையாது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று எல்லாவற்றிலும் சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.

210
Rohit Sharma Clean Bowled, Top 5 Bowlers Who Have Taken Most Clean Bowled Wickets

அப்படி ஒரு சாதனை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். அதாவது, பவுலிங்கில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சாளர்கள் குறித்து பார்க்கலாம்.

 

310
Ollie Pope Clean Bowled, Top 5 Bowlers Who Have Taken Most Clean Bowled Wickets

இந்த பவுலர்களை கண்டே பேட்ஸ்மேன்களுக்கு பயம் என்று சொல்லக் கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். அவர்களைப் பற்றிய பதிவு தான் இது.

410
Kapil Dev, Top 5 Bowlers Who Have Taken Most Clean Bowled Wickets

கபில் தேவ்:

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்களில் பட்டியலில் இந்திய ஜாம்பவான் கபில் தேவ் 6ஆவது இடத்தில் உள்ளார். இவர், கபில் தேவ், சர்வதேச கிரிக்கெட்டில் கிளீன் போல்டு மூலமாக 167 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

510
Lasith Malinga, Most Wickets with Clean Bowled in International Cricket,

லசித் மலிங்கா:

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்களில், இலங்கையைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். யார்க்கர் மன்னன் என்று சொல்லப்படும் மலிங்கா சர்வதேச கிரிக்கெட்டில் கிளீன் போல்டு மூலம் 171 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

610
James Anderson, Top 5 Clean Bowled Wicket Taker Bowlers

ஜேம்ஸ் ஆண்டர்சன்:

இந்தப் பட்டியலில் இங்கிலாந்தின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4ஆவது இடத்தில் உள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் கிளீன் போல்டு மூலமாக 201 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

710
Mitchell Starc, Top 5 Clean Bowled Wicket Taker Bowlers

மிட்செல் ஸ்டார்க்:

ஆஸ்திரேலியாவின் ஆபத்தான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான மிட்செல் ஸ்டார்க் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 3ஆவது இடத்தில் இருக்கிறார். இந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கிளீன் போல்டு மூலமாக 206 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

810
Waqar Younis, Top 5 Clean Bowled Wicket Taker Bowlers

வக்கார் யூனிஸ்:

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்களில் பாகிஸ்தானின் ஜாம்பவான் வக்கார் யூனிஸ் 2ஆவது இடத்தில் உள்ளார். முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான வக்கார் யூனிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் கிளீன் போல்டு மூலமாக 253 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

910
Wasim Akram, Top 5 Bowlers Who Have Taken Most Clean Bowled Wickets

வாசீம் அக்ரம்:

பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளரான வாசீம் அக்ரம் தான் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

1010
Wasim Akram, Top 5 Bowlers Who Have Taken Most Clean Bowled Wickets

சர்வதேச கிரிக்கெட்டில் கிளீன் போல்டு மூலமாக 278 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் மொத்தமாக 502 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories