காதலியை கரம் பிடிக்கும் குல்தீப் யாதவ்.. வியக்க வைக்கும் மிஸ்டரி ஸ்பின்னரின் சொத்து மதிப்பு!

Published : Mar 13, 2026, 03:04 PM IST

கிரிக்கெட்டில் தனது ஸ்பின் பவுலிங் பவுலிங் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை வீழ்த்தி கலக்கி வரும் குல்தீப் யாதவ், சொத்து மதிப்பிலும் கலக்கி வருகிறார். இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

PREV
14
குல்தீப் யாதவ் திருமணம்

இந்திய அணியின் முன்னணி ஸ்பின் பவுலர் குல்தீப் யாதவ், தனது காதலியான வன்ஷிகாவை நாளை (மார்ச் 14) திருமணம் செய்ய உள்ளார். உத்தரகாண்டின் அழகிய மலைவாசஸ்தலமான முசோரியில் உள்ள 'வெல்கம் ஹோட்டல் தி சவோய்' ஹோட்டலில் இவர்களில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் லக்னோவில் நிச்சயதார்த்தம் நடந்தது. அந்த நிகழ்வில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

24
குல்தீப் யாதவ் காதலி யார்?

நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில், திருமண விழாவில் விராட் கோலி, ரோகித் சர்மா உள்பட பல முக்கிய கிரிக்கெட் பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குல்தீப்பின் வருங்கால மனைவி வன்ஷிகா அவரது சிறுவயது நண்பர். கான்பூரைச் சேர்ந்த இவர், எல்.ஐ.சி (LIC) நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் தனது உயர்கல்வியை பயின்றது குறிப்பிடத்தக்கது.

34
குல்தீப் சொத்து மதிப்பு

கிரிக்கெட்டில் தனது ஸ்பின் பவுலிங் பவுலிங் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை வீழ்த்தி கலக்கி வரும் குல்தீப் யாதவ், சொத்து மதிப்பிலும் கலக்கி வருகிறார். 2026-ம் ஆண்டு நிலவரப்படி, குல்தீப் யாதவின் மொத்த சொத்து மதிப்பு தோராயமாக ரூ.32 கோடி முதல் ரூ.35 கோடி வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

44
ஐபிஎல், விளம்பர வருமானம்

பிசிசிஐயின் கிரேடு பி ஒப்பந்தத்தில் உள்ள குல்தீப் யாதவ் ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் ஊதியமாகப் பெறுகிறார். ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடும் இவருக்கு, ஒரு சீசனுக்கு சுமார் ₹13.25 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது. மேலும் Adidas, Oppo, Zebronics போன்ற பல முன்னணி நிறுவனங்களின் விளம்பரத் தூதராக இருந்து கோடி கணக்கில் வருமானம் ஈட்டுகிறார்.

வீடுகள், சொகுசு கார்கள்

கான்பூரில் குல்தீப் யாதவுக்கு ஒரு சொகுசு பங்களாவும், டெல்லியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பும் இவருக்கு உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் GLE (Mercedes-Benz GLE), ஆடி ஏ6 (Audi A6) மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் (Ford EcoSport) போன்ற விலை உயர்ந்த கார்களையும் வைத்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories