என்னால தூங்கவே முடியல விடிய காத்தால 2.30 மணிக்கு கோலி ரூம் கதவை தட்ட நெனச்சேன் குலதீப் யாதவ் நெகிழ்வு.!

First Published Nov 6, 2020, 12:47 PM IST

25 வயதான குல்தீப் யாதவ் 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் இவர் 6 டெஸ்ட் போட்டிகள்,60 ஒருநாள் போட்டிகள் மற்றும் 21 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்

தனது முதல் டெஸ்ட் போட்டியில் தான் அறிமுகமான போது தனது மனநிலை எவ்வாறு இருந்தது என்பது குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்
undefined
சரியாக நான் களமிறங்கும் அந்த முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் முந்தைய நாள் என்னுடன் அணில் கும்ப்ளே உணவு உட்கொண்டார். அப்போது தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த அவர் அப்பொழுது என்னிடம் வந்த அவர் நாளை நீ விளையாட போகிறாய், உன்னிடமிருந்து நான் 5 விக்கெட்டுகளை எதிர்பார்க்கிறேன் என தெரிவித்தார்
undefined
அதன்பிறகு அன்றைய இரவு 9 மணிக்கு உறங்கிவிட்டேன். அதிகாலை 3 மணிக்கு எனக்கு விழிப்பு வந்தது. நான் குழப்பத்திலும் பதட்டத்திலும் இருந்தேன். அதனால் எனது பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த விராட் கோலியை எழுப்பலாம் என்று யோசித்தேன். ஆனால் அவர் என்னை என்ன நினைப்பாரோ என்று தோன்றியது மேலும் என்னிடம் அவர் கோபப்படும் வாய்ப்பு உள்ளது. அதனால் நான் மீண்டும் போய் படுத்து விட்டு 6 மணிக்கு எழுந்தேன்
undefined
ரஞ்சிப் போட்டியில் விளையாடியது போலவே அந்த முதல் போட்டியில் நான் என் மனநிலையை மாற்றி விளையாடினேன். மதிய இடைவேளைக்கு பிறகு எனக்கு முதல் விக்கெட் கிடைத்தது
undefined
அது என்னுடைய மகிழ்ச்சியான தருணம். முதல் நாள் முடிந்த பிறகு நான் சச்சின் டெண்டுல்கரிடம் பேசினேன். அவர் எனக்கு பல ஆலோசனைகளையும், பல விஷயங்களையும் கூறினார். சரியான நிலையை அடைய எவ்வளவு உழைக்க வேண்டும் என்று அன்றைய நாள் நான் படுக்கையில் படுத்து யோசித்துக் கொண்டிருந்தேன்
undefined
click me!