சுழலுக்கு பெயர் போன மைதானங்களில் யாருக்கு வாய்ப்பு? பயிற்சியில் கலக்கிய குல்தீப் யாதவ்!

First Published | Jun 19, 2024, 2:37 PM IST

டி20 உலகக் கோப்பை தொடருக்கான சூப்பர் 8 சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ள நிலையில் சுழலுக்கு பெயர் போன வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல் இருவரில் யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

T20 World Cup 2024

டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் சுற்றில் 3 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 3 போட்டியிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இந்த தொடரில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 113 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. எனினும், கடைசியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூயார்க் மைதானம் வேகத்திற்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்தது.

T20 World Cup 2024

கடைசி போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. குரூப் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் இன்று இரவு 8 மணிக்கு சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்குகிறது. இதில் முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியானது ஆண்டிகுவாவில் நடைபெறுகிறது.

Latest Videos


Rohit Sharma

நாளை நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி பார்படோஸில் நடைபெறுகிறது. 22ஆம் தேதி இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இதே போன்று கடைசியாக 24 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

IND vs AFG, T20 World Cup 2024

இந்த நிலையில் தான் நாளை நடைபெறும் போட்டிக்கு முன்னதாக சுழலுக்கு பெயர் போன வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

T20 World Cup 2024

குரூப் சுற்று போட்டியில் அக்‌ஷர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா மட்டுமே விளையாடினர். இதில் ஜடேஜா ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. ஆனால், சூப்பர் 8 சுற்று போட்டிக்கு குல்தீப் யாதவ், சாஹல் இருவருமே முக்கியம். டி20 போட்டிகளில் சாஹல் 96 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். குல்தீப் யாதவ் 59 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார்.

Yuzvendra Chahal

இருவரும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கின்றனர். 13 போட்டிகளில் குல்தீப் யாதவ் 23 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதே போன்று, சாஹல் 7 போட்டிகளில் 12 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kuldeep Yadav

இந்த நிலையில் தான், இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஷ் சாவ்லா பிளேயிங் 11ல் குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல் இருவரில் யாரேனும் ஒருவர் இடம் பெற வேண்டும் என்று கூறியுள்ளார். நியூயார்க் மைதானங்களை விட வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் வித்தியாசமாக இருக்கும். விளையாடுவதற்கு கடினமானதாக இருக்கும். எனினும் யார் இடம் பெறுவார்கள்? ராகுல் அண்ட் கோ அதை எப்படி செய்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

click me!