
கடந்த 2022 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது.
இதில், டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-2 என்று இழந்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 0-3 என்று இழந்தது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு கேஎல் ராகுல் முதல் முறையாக கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
தனது முதல் கேப்டன்ஷியில் கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை தழுவியது. முதல் டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலி கேப்டனாக இருந்தார். 2ஆவது டெஸ்ட் போட்டிக்கு மட்டும் கேஎல் ராகுல் கேப்டனாக இருந்தார். ஆனால், அந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி மொத்தமாக தொடர்ந்து 4 ஒருநாள் போட்டிகளில் தோல்வியை தழுவியது. இதில், 3 போட்டிகள் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இழந்த நிலையில் தான் தற்போது கேஎல் ராகுல் தலைமையிலான இந்தியா அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி விளையாடிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று 3-0 என்று தொடரை கைப்பற்றியது.
இதே போன்று கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த வங்கதேச அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருந்தார். அந்த 2 போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. 3ஆவது போட்டிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக இருந்தார். இதில், இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இஷான் கிஷான் 210 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். ரோகித் சர்மாவைத் தொடர்ந்து சுப்மன் கில், இஷான் கிஷான் என்று இளம் வீரர்கள் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு முதல் 2 போட்டிகளுக்கு கேஎல் ராகுல் கேப்டனாக இருந்தார். அந்த 2 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-1 என்று தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில், தற்போது தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் விளையாடிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்று சமன் செய்தது.
இதையடுத்து நடந்து வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.
அதோடு, முதல் முறையாக பிங்க் நிற ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதுவரையில் கேஎல் ராகுல் 14 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். இதில், 10 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்பக புற்று நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தென் ஆப்பிரிக்கா அணியானது வருத்திற்கு ஒருமுறை இது போன்று பிங்க் நிற ஜெர்சி அணிந்து விளையாடுகிறது.
இதுவரையில் தென் ஆப்பிரிக்கா அணி 12 பிங்க் நிற ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 10ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்துள்ளது. அதில், ஒன்று தான் கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணிக்கு எதிரான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.