Ishan Kishan
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில், முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்படவே, 2ஆவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
SA vs IND Test Series
இதையடுத்து தொடரை தீர்மானிக்கும் 3ஆவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்று சமன் செய்தது. இதைத் தொடர்ந்து தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடந்தது.
Ishan Kishan
இதில், முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியைப் பொறுத்த வரையில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தார். ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
Ishan Kishan Ruled Out From Test
இந்தப் போட்டியைத் தொடர்ந்து, வரும் 19ஆம் தேதி கியூபெர்காவில் நடக்க இருக்கிறது. அன்றுதான் ஐபிஎல் மினி ஏலமும் நடக்க இருக்கிறது. ஒருநாள் போட்டியைத் தொடர்ந்து வரும் 26ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் முதல் டெஸ்ட் போட்டியும், 2024 ஆம் ஆண்டு ஜனவரி 03 ஆம் தேதி முதல் 07 ஆம் தேதி வரையில் 2ஆவது டெஸ்ட் போட்டியும் நடக்க இருக்கிறது.
South Africa Test Series
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா வந்து சிவப்பு நிற பந்துகளில் பயிற்சியை தொடங்கியுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயரும் இன்று முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய நிலையில், பயிற்சியை மேற்கொள்ள உள்ள நிலையில், அடுத்த 2 போட்டிகளிலும் இடம் பெறமாட்டார்.
Ishan Kishan
இந்த நிலையில் தான் இஷான் கிஷான் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தனிப்பட்ட காரணங்களுக்காக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விடுவிக்குமாறு பிசிசிஐக்கு இஷான் கிஷான் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து டெஸ்ட் அணியில் இருந்து விக்கெட் கீப்பர் நீக்கப்பட்டுள்ளார்.
Ishan Kishan
மேலும், அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பரான கேஎஸ் பரத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்த முகமது ஷமி உடல்தகுதி பெறாத நிலையில், டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
Ishan KIshan
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா, கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்).