ஷ்ரேயாஸ் ஐயர், சாய் சுதர்சன் காம்போவில் இந்தியா சிம்பிள் வெற்றி – ஒருநாள் தொடரில் 1-0 என்று முன்னிலை!

First Published | Dec 17, 2023, 6:37 PM IST

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Sai Sudharsan Debut

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்தது. இதில், டாஸ் வென்று தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கானின் வேகத்தில் 116 ரன்களுக்கு சுருண்டது.

South Africa vs India First ODI Live

இதில், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் இருவரும் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் அதுவும் அடுத்தடுத்த பந்துகளில் கைப்பற்றினர். தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக அண்டில் பெக்லுக்வேயோ 33 ரன்கள் எடுத்தார். மற்றொரு வீரர் டோனி டே ஜோர்ஸி 28 ரன்கள் எடுத்தார்.

Tap to resize

Arshdeep Singh

பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தார். ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

Arshdeep Singh 5 Wickets

பின்னர் எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் அறிமுகமான சாய் சுதர்சனுக்கு இந்தப் போட்டியில் அதிர்ஷ்டம் இருந்தது என்று சொல்லலாம். அவர், முதல் ஓவரின் 4ஆவது பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்துள்ளார்.

Sai Sudharsan

தென் ஆப்பிரிக்கா வீரர்கள் எல்பிடபிள்யூவிற்கு நடுவரிடம் முறையிட அவர் அவுட் கொடுக்க மறுத்துள்ளார். எனினும், தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்க்ரம் ரெவியூ எடுக்கவில்லை. ஆனால், டிவி ரீப்ளேயில் பந்தானது பிட்சிங் இன்லைன் மட்டுமின்றி மிடில் அண்ட் லெக் ஸ்டெம்பிற்கு நடுவில் சென்றது தெளிவாக தெரிந்தது.

South Africa

இதையடுத்து விக்கெட் கீப்பரான ஹென்ரி கிளாசென் ரெவியூ கேட்க சொல்லாத தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டார். இதே போன்று தான் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கும் நடந்தது. கடைசியில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் ரெவியூ எடுக்க விக்கெட்ஸ் ஹிட்டிங் என்று வரவே அவர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Arshdeep Singh

அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு நிதானமாக விளையாடிய சாய் சுதர்சன் தனது அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்தார். அவர் 41 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதம் அடித்தார்.

Sai Sudharsan

இவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயரும் தன் பங்கிற்கு அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்ஸ் உள்பட 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் அடுத்து நடக்க இருக்கும் 2 ஒருநாள் போட்டிகளில் இடம் பெறமாட்டார். அவர், டெஸ்ட் தொடருக்கான பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார்.

SA vs IND 1st ODI Live Score

கடைசியாக சாய் சுதர்சன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இந்தியா 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருது வென்றார்.

Latest Videos

click me!