அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் வேகத்தில் சிக்கி சின்னாபின்னமான தென் ஆப்பிரிக்கா – 116 ரன்களுக்கு கதம் கதம்!

First Published | Dec 17, 2023, 4:41 PM IST

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 27.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

Arshdeep Singh

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி 1-1 என்று டி20 தொடரை சமன் செய்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி தற்போது ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Arshdeep Singh

அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் டோனி டே ஜோர்ஸி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஹென்ட்ரிக்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் 1.4 ஓவரில் அர்ஷ்தீப் சிங் வேகத்தில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த ரஸ்ஸி வான் டெர் டூசென் போட்டியின் 1.5ஆவது ஓவரிலேயே கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார்.

Tap to resize

South Africa vs India First ODI

ஒருபுறம் நிதானமாக விளையாடிய டோனி டே ஜோர்ஸி 28 ரன்களில் அர்ஷ்தீப் சிங் பந்தில் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த ஹென்ரிச் கிளாசென் 6 ரன்களில் அர்ஷ்தீப் சிங் பந்தில் கிளீன் போல்டானார்.

Arshdeep Singh

அப்போது தென் ஆப்பிரிக்கா அணியானது, 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 52 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது. அர்ஷ்தீப் சிங் 5 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். 

Arshdeep Singh 5 Wickets

கேப்டன் ஐடன் மார்க்ரம் 10.1ஆவது ஓவரிலேயே ஆவேஷ் கான் பந்தில் கிளீன் போல்டானார். அடுத்த பந்திலேயே வியான் முல்டர் கோல்டன் டக்கில் வெளியேறினார். இதையடுத்து அதிரடிக்கு பெயர் போன டேவிட் மில்லர் 12.6 ஆவது ஓவரில் ஆவேஷ் கான் பந்தில் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து 2 ரன்களில் வெளியேறினார்.

South Africa vs India First ODI

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேசவ் மகாராஜ் 4 ரன்களில் ஆவேஷ் கான் பந்தில் ஆட்டமிழந்தார். அண்டில் பெஹ்லுக்வேயோ நிதானமாக விளையாடி ஓரளவு ரன்கள் சேர்த்தார். அவர் 33 ரன்களில் அர்ஷ்தீப் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக அர்ஷ்தீப் சிங் ஒருநாள் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.

South Africa vs India First ODI

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார். அர்ஷ்தீப் வீசிய 10 ஓவர்களில் 37 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

South Africa vs India First ODI

கடைசியாக குல்தீப் யாதவ் தன் பங்கிற்கு ஒரு விக்கெட் கைப்பற்றவே தென் ஆப்பிரிக்கா 27.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். முகேஷ் குமார் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.

Latest Videos

click me!