தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தலா ஒரு ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றனர். ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக டிராபியை இரு அணிகளின் கேப்டன்கள் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
26
SA vs IND ODI
இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இன்று ஆரம்பமாகிறது. ஜோகன்னஸ்பர்கில் இன்று நடக்கும் முதல் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி முதலில் பவுலிங் செய்கிறது.
36
SA vs IND
கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணியில் ரிங்கு சிங் இடம் பெறவில்லை. கடந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சனுக்கு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
46
Sanju Samson-Rahul
இன்று நடக்கும் போட்டியின் மூலமாக இந்திய அணியில் இடம் பெறுகிறார். இடது கை வீரரான திலக் வர்மாவிற்கும் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். யுஸ்வேந்திர சகாலுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.