ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் ரோகித் சர்மா – ஆகாஷ் சோப்ரா பாராட்டு!

First Published | Dec 16, 2023, 4:14 PM IST

ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் ரோகித் சர்மா என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா பாராட்டு தெரிவித்துள்ளார்.

Mumbai Indians

இந்தியாவில் 17ஆவது ஐபிஎல் தொடர் வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்க இருக்கிறது. ஐபிஎல் 2024 தொடருக்கான மினி ஏலமானது துபாயில் வரும் 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணிக்கு நடக்க இருக்கிறது.

Mumbai Indians

ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியானது. இதையடுத்து இந்த ஏலத்திற்கு விடுவிக்கப்பட்ட வீரர்கள் உள்பட மொத்தமாக 1166 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்து வைத்துள்ளனர். இதில், 833 வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

Tap to resize

IPL 2024

ஐபிஎல் ஏலத்திற்கு காலியாக உள்ள 77 இடங்களுக்கான ஏலத்தில் 333 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர். இதில், 30 வீரர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். மும்பை இந்தியன்ஸ் அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 8 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட உள்ளனர். இந்த ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியானது ரோகித் சர்மாவை கேப்டன்சி பொறுப்பிலிருந்து நீக்கி, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது.

Mumbia Indians

இது குறித்து சீனியர் வீரர்கள், முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு மீம்ஸ் உருவாக்கியும் டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் ரோகித் சர்மா என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

Rohit Sharma

அதுமட்டுமா, ரோகித் சர்மாவின் 10 ஆண்டுகால கேப்டன்சி என்பது "ஒரு சகாப்தத்தின் முடிவு" என்று முத்திரை குத்தினார். தொடக்க வீரராகோ அல்லது மிடில் ஆர்டரிலோ தன்னால் என்ன முடியுமோ அதனை அணிக்காக செய்து கொடுத்தவர் ரோகித் சர்மா.

Rohit Sharma Mumbai Indians

குறிப்பிடத்தக்க வகையில், 2013 ஆம் ஆண்டு, முதல் முறையாக ஐபிஎல் கேப்டனாக ரோகித் வெற்றி பெற்றார், பின்னர் 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மேலும் நான்கு டிராபிகளை வென்றார். ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டிராபிகளை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் திகழ்ந்த நிலையில், எம்எஸ் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் 5ஆவது முறையாக டிராபியை வென்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சமன் செய்தது.

Mumbai Indians

சிறந்த கேப்டன்களில் ஒருவர். 10 ஆண்டுகளில் 5 முறை டிராபி வென்று கொடுத்துள்ளார். மிகவும் வெற்றிகரமான கேப்டன். போட்டியை தன்மையை பொறுத்து அணியை நன்றாக வழிநடத்தினார். எப்போதும் தன்னை விட அணியை முன்னிலையில் வைத்திருந்தார் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!