Rohit Sharma, CSK: சென்னைக்கு மாறும் ரோகித் சர்மா – சிஎஸ்கேயின் அடுத்த கேப்டன் ஹிட்மேன்?

First Published | Dec 17, 2023, 12:59 PM IST

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரோகித் சர்மா வர இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

Rohit Sharma-Ricky Ponting

இந்தியா நடத்தும் 17ஆவது ஐபிஎல் தொடர் வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்க இருக்கிறது. இந்த தொடருக்கான ஏலம் வரும் 19ஆம் தேதி நாளை மறுநாள் துபாயில் நடக்க இருக்கிறது.

Rohit Sharma MI

இதற்கு முன்னதாக ஐபிஎல் அணிகளில் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும், டிரேட் முறையில் சில வீரர்கள் வேறு அணிக்கு வாங்கப்பட்டனர். அதில், குறிப்பிடத்தக்க வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியால் ஹர்திக் பாண்டியா வாங்கப்பட்டுள்ளார்.

Tap to resize

Rohit Sharma CSK

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா 2 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியால் மீண்டும் வாங்கப்பட்டுள்ளார்.

Mumbai Indians

இந்த நிலையில், தான் மும்பை இந்தியன்ஸ் அணியில் 10 வருடங்களாக கேப்டனாக இருந்த ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்றார்.

Rohit Sharma

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை டிராபியும் வென்று கொடுத்துள்ளார். ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டும் கூட ரோகித் சர்மா ஒரு வாழ்த்து கூட கூறவில்லை. சூர்யகுமார் யாதவ் கூட ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

Rohit Sharma Mumbai Indians

முதல் முறையாக ஹர்திக் பாண்டியா கேப்டன்ஷிப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாட உள்ளது. இதில் ரோகித் சர்மாவும் ஒருவராக இருக்கிறார். ஆனால், அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது குறித்து இதுவரையில் எந்த பதிலும், விமர்சனமும் முன் வைக்கவில்லை. இது ஒருபுறம் இருந்தாலும், ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது.

Rohit Sharma IPL 2024

ஐபிஎல் ஏலத்திற்கு பிறகு மீண்டும் டிரேட் முறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரோகித் சர்மா டிரேட் முறையில் சிஎஸ்கே அணிக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது. அங்கு, தோனி இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரோகித் சர்மா இடம் பெற்றால் அடுத்த ஆண்டு அவர் தான் சிஎஸ்கே அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rohit Sharma and Hardik Pandya

இந்த நிலையில், சிஎஸ்கேயின் முன்னாள் வீரரான பத்ரிநாத், ரோகித் சர்மாவிற்கு சிஎஸ்கே ஜெர்சியை அணிவித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதோடு ஒருவேளை நடந்தால், என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதே போன்று சினிமா விமர்சகரான ரமேஷ் பாலாவும் தனது எக்ஸ் பக்கத்தில் ரோகித் சர்மா சிஎஸ்கே அணிக்கு மாற்றப்பட்டால் நன்றாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos

click me!