DC vs KXIP மோதல்: டெல்லி கேபிடள்ஸ் பேட்டிங்.. யுனிவர்ஸ் பாஸை ஓரமா உட்கார வைத்த பஞ்சாப் அணி

First Published Sep 20, 2020, 7:25 PM IST

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதும் நிலையில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல், பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் நேற்று தொடங்கிய நிலையில், இன்று நடக்கும் 2வது போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் அணியும் கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளும் மோதுகின்றன.
undefined
துபாயில் இந்திய நேரப்படி 7.30 மணிக்கு போட்டி தொடங்கும் நிலையில், சரியாக 7 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல், டெல்லி கேபிடள்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
undefined
இரு அணிகளுமே இளமையும் அனுபவமும் கலந்த சிறந்த கலவையிலான வலுவான அணிகளாக, சமபலத்துடன் திகழ்வதால் போட்டி கண்டிப்பாக கடுமையாக இருக்கும்.
undefined
இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் 4 வெளிநாட்டு வீரர்களாக நிகோலஸ் பூரான், க்ளென் மேக்ஸ்வெல், கிறிஸ் ஜோர்டான் மற்றும் ஷெல்டான் கோட்ரெல் ஆகிய நால்வரையும் தேர்வு செய்துள்ளனர். அதிரடி மன்னன், ஐபிஎல்லின் வெற்றிகரமான மற்றும் அபாயகரமான பேட்ஸ்மேனான யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்லுக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்கப்படவில்லை.
undefined
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:கேஎல் ராகுல்(கேப்டன்), மயன்க் அகர்வால், கருண் நாயர், சர்ஃபராஸ் கான், க்ளென் மேக்ஸ்வெல், நிகோலஸ் பூரான், கிருஷ்ணப்பா கௌதம், கிறிஸ் ஜோர்டான், ஷெல்டான் கோட்ரெல், ரவி பிஷ்னோய், முகமது ஷமி.
undefined
டெல்லி கேபிடள்ஸ் அணி:ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, மோஹித் சர்மா.
undefined
பயிற்சியின்போது இஷாந்த் சர்மா காயமடைந்ததால் இந்த போட்டியில் ஆடவில்லை.
undefined
click me!