என்ன தல “Chest"லாம் பயங்கரமா இருக்கு? ஃபுல் ஒர்க் அவுட்டா..? முரளி கார்த்திக்கின் கேள்விக்கு தோனியின் பதில்

First Published Sep 20, 2020, 6:50 PM IST

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் போட்ட பின்னர் பேசும்போது, தோனியின் உடற்கட்டை பார்த்து, முரளி கார்த்திக் கேட்ட கேள்விக்கு தோனி அளித்த பதிலை பார்த்தோம். 
 

ஐபிஎல் 13வது சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதின. அபுதாபியில் நடந்த இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே, புள்ளி பட்டியலில் கணக்கை தொடங்கியது.
undefined
400 நாட்களுக்கு பிறகு மீண்டும் தோனியை களத்தில் கண்ட ரசிகர்கள் உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ஓய்வு அறிவித்த நிலையில், இனிமேல் அவரை சர்வதேச கிரிக்கெட்டில் பார்க்கமுடியாது. தோனியை களத்தில் பார்க்க ஒரே வழி ஐபிஎல் தான்.
undefined
அந்தவகையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தோனியை களத்தில் கண்ட ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அதுவும், டபுள் மகிழ்ச்சி. ஏனெனில் தோனி கடந்த ஓராண்டாக கிரிக்கெட் ஆடாததாலும், குறிப்பாக லாக்டவுன் காலத்தில் அவருக்கு உடற்பயிற்சி செய்ய போதிய கால அவகாசம் கிடைத்ததாலும், நன்றாக உடற்பயிற்சி செய்து சிறந்த Arms, Chest உடன் நல்ல உடற்கட்டுடன் களத்திற்கு வந்தார்.
undefined
அவரது உடலமைப்பு முன்பைவிட மாறியிருந்ததை பார்க்க முடிந்தது. அதைக்கண்ட முரளி கார்த்திக், அதுகுறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தோனி, லாக்டவுன் காலத்தில் உடலின் ஃபிட்னெஸில் கூடுதல் கவனம் செலுத்த போதிய அவகாசமும் சுதந்திரமும் கிடைத்தது என்றார்.
undefined
அவரது உடலமைப்பு முன்பைவிட மாறியிருந்ததை பார்க்க முடிந்தது. அதைக்கண்ட முரளி கார்த்திக், அதுகுறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தோனி, லாக்டவுன் காலத்தில் உடலின் ஃபிட்னெஸில் கூடுதல் கவனம் செலுத்த போதிய அவகாசமும் சுதந்திரமும் கிடைத்தது என்றார்.
undefined
click me!