உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நீண்ட இடைவெளிக்குப் பிறகு கருண் நாயர் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்ட கருண் நாயர், 4 போட்டிகளில் 8 இன்னிங்ஸ்களில் 205 ரன்கள் மட்டுமே எடுத்தார், இதைத் தொடர்ந்து, கருண் நாயர் மீண்டும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கருண் நாயரின் பதிவு வைரல்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்தும், தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, கருண் நாயரின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. கருண் நாயருக்கு ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்கள் துருவ் ஜூரெலுக்கு பதில் இவரை அணியில் எடுத்திருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.