சச்சினின் சானைக்காக நான் விளையாடவில்லை; என் பயணம் ரொம்ப பெருசு - ஜோ ரூட் வெளிப்படை

First Published Sep 1, 2024, 6:18 PM IST

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தி உள்ள இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் விரைவில் சச்சினின் சாதனைகளை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sachin Tendulkar, Joe Root

இங்கிலாந்து, இலங்கை இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 427 ரன்களும், இலங்கை அணி 196 ரன்களும் சேர்த்தன. இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அதிகபட்சமாக 143 ரன்களும், அட்கின்சன் 118 ரன்களும் சேர்த்தனர்.

Joe Root

231 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 251 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இரண்டாவது இன்னிங்சிலும் சதம் அடித்த ஜோ ரூட் 103 ரன்களை சேர்த்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு 483 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களை சேர்த்துள்ளது.

Latest Videos


Joe Root

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 12,377 ரன்களை சேர்த்துள்ளார். ரூட் தொடர்ந்து இதே போன்ற அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த டெண்டுல்கரின் (15,921) ரன்கள் என்ற சாதனையை விரைவில் முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

Joe Root

சச்சினின் சாதனையை முறியடிப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜோ ரூட், நான் தற்போது சச்சின் டெண்டுல்கரின சாதனையை குறிவைத்து விளையாடிவில்லை. என்னால் எனது அணிக்கு எவ்வளவு பங்களிப்பை அளிக்க முடியுமோ அதனை நான் செய்து கொடுப்பேன். எனது அணியின் முன்னேற்றம் தான் எனக்கு முக்கியம்.

Joe Root

எனது பயணம் எவ்வளவு தூரம் சென்று முடியும் என்பதை இப்போதே சொல்ல முடியாது. இறுதியில் பார்த்துக் கொள்ளலாம். ஒவ்வொருமுறை சதம் அடிக்கும்போதும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. ஆனால் சதத்தைக் காட்டிலும் எனது அணி வெற்றி பெறும்போது கூடுதல் உத்வேகம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

click me!