எந்த கொம்பனாலும் முறியடிக்க முடியாத சேஸ் மாஸ்டர் விராட் கோலியின் டாப் 5 சாதனைகள்!

First Published | Sep 1, 2024, 12:50 PM IST

16 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தில் விராட் கோலி ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து 50 சதங்கள் அடித்துள்ளார். கோலியின் முறியடிக்க முடியாத சாதனைகளின் தொகுப்பு இதோ…

Virat Kohli

16 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தில் விராட் கோலி ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். அவற்றில் ஒன்று தான் கிரிக்கெட்டின் கடவுளாக போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரின் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் சாதனையை முறியடித்தார். 2023 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அடுத்தடுத்த சதங்கள் அடித்ததன் மூலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்து சச்சினின் 49 சதங்கள் சாதனையை முறியடித்தார்.

Virat Kohli Top 5 Records

விராட் கோலியின் இந்த 50 சதங்கள் சாதனையை எந்த கிரிக்கெட் வீரராலும் முறியடிக்கவே முடியாது. இது போன்று இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான கோலியின் முறியடிக்க முடியாத சாதனைகளின் தொகுப்பு பற்றி பார்க்கலாம் வாங்க…

Tap to resize

Virat Kohli 50 Centuries

50 சதங்கள்

35 வயதாகும் கோலி 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் போது 50 சதங்கள் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்தார். சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடனும், ரோகித் சர்மா 31 சதங்களுடனும் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். கோலியின் இந்த சாதனையை எந்த வீரராலும் முறியடிக்க முடியாது.

Virat Kohli: Most Runs in ODI World Cup 2023

உலகக் கோப்பையில் அதிக ரன்கள்:

2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி 11 போட்டிகளீல் விளையாடி 765 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னதாக 2003 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் எடுத்த 673 ரன்களே அதிக ரன்களாக இருந்தது. இந்த சாதனையை கோலி முறியடித்து புதிய சாதனையை படைத்திருக்கிறார். இந்த சாதனையை கூட கிரிக்கெட் வீரர்கள் முறியடிக்க வாய்ப்பிருக்கிறது.

India , Cricket, virat kohli - IPL Most Runs

ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள்:

சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் கில்லி என்று நிரூபித்து காட்டியவர் ஆர்சிபி வீரர் விராட் கோலி. 2016 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் கோலி 973 ரன்களை அடித்தார். இது ஐபிஎல் தொடரில் ஒரே சீசனில் எடுக்கப்பட்ட அதிக ரன்கள் சாதனையாகும்.

Virat Kohli - IPL 973 Runs

2023-ல் 890 ரன்கள் எடுத்து சாதனையை முறியடிக்க சற்று அருகில் வந்த ஒரு பேட்ஸ்மேன் தான் சுப்மன் கில். கோலியைத் தவிர, எந்தவொரு பேட்ஸ்மேனும் ஐபிஎல் தொடரில் 900 ரன்களை எட்டவில்லை. இனி வரும் காலங்களில், மற்ற வீரர்கள் இந்த இலக்கை எட்டுவது என்பது எளிதாக இருக்காது.

Virat Kohli - Most Player of the Series

அதிக தொடர் நாயகன் விருது:

டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில்தனது தகுதியை நிரூபித்திருப்பதால், விளையாட்டை விளையாடுவதற்கான சிறந்த அனைத்து வடிவ பேட்ஸ்மேன் யார் என்றால் அது கோலி தான். ஒருநாள் போட்டிகளில் 11, டெஸ்டில் 3 மற்றும் டி20 போட்டிகளில் 7 என 21 தொடரின் சிறந்த வீரர் விருதுகளை கோலி வென்றுள்ளார் - இது எந்த ஒரு வீரரும் அதிக பட்சம் வென்றதில்லை. சச்சின் டெண்டுல்கர் 20 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார்.

Virat Kohli - Most Centuries in Chasing

சேஸிங்கில் அதிக ஒருநாள் கிரிக்கெட் சதங்கள்:

கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் 2ஆவது பேட்டிங் செய்து தனது அசாத்திய சாதனையுடன் பல ஆண்டுகளாக 'சேஸ் மாஸ்டர்' பட்டத்தை சொந்தமாக்கியுள்ளார். கோலி சேஸிங்கில் மட்டும் 27 சதங்கள் அடித்து 50 ஓவர் வடிவத்தில் சிறந்த சேஸர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கோலிக்கு பிறகு டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் சேஸிங் செய்யும் போது 17 சதங்கள் அடித்துள்ளார்.

Latest Videos

click me!