#INDvsENG தயவுசெய்து என்னை ஆளை விடுங்க..! நட்சத்திர வீரரின் கோரிக்கையை ஏற்று கழட்டிவிட்ட பிசிசிஐ

First Published Feb 27, 2021, 3:07 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளார்.
 

இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்துவருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் 2வது டெஸ்ட்டில் 317 ரன்கள் வித்தியாசத்திலும், 3வது டெஸ்ட்டில் 10 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
undefined
கடைசி டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 4ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. அந்த போட்டிக்கான இந்திய அணியிலிருந்து பும்ராவின் வேண்டுகோளை ஏற்று, பிசிசிஐ அவரை கடைசி போட்டியிலிருந்து விடுவித்துள்ளது.
undefined
முதல் டெஸ்ட்டில் ஆடிய பும்ரா, 2வது டெஸ்ட்டில் ஆடவில்லை. அகமதாபாத்தில் நடந்த 3வது டெஸ்ட்டில் பும்ரா ஆடினார். முதல் டெஸ்ட்டில் 4 விக்கெட் வீழ்த்திய பும்ரா, 3வது டெஸ்ட்டில் முழுக்க முழுக்க ஸ்பின்னர்களே ஆதிக்கம் செலுத்தியதால் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. கடைசி டெஸ்ட் வரும் மார்ச் 24ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், தனிப்பட்ட காரணம் என்று கூறி, தன்னை கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து விடுவிக்குமாறு பிசிசிஐயிடம் அவர் விடுத்த கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ, பும்ராவை கடைசி டெஸ்ட்டிலிருந்து விடுவித்துள்ளது.
undefined
பும்ராவை விடுவித்த அதேவேளையில், அவருக்கு பதிலாக எந்த வீரரையும் புதிதாக சேர்க்கவில்லை என்றும் பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.
undefined
கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, ரஹானே(துணை கேப்டன்), கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), அஷ்வின், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.
undefined
click me!