IND vs AFG T20 WC 2024: புதிய சாதனை படைத்த ஜஸ்ப்ரித் பும்ரா – 15 ஓவர்களில் 62 டாட் பந்து வீசி சாதனை!

First Published | Jun 21, 2024, 1:21 PM IST

டி20 உலகக் கோப்பை தொடரின் இதுவரையில் பும்ரா வீசிய 15 ஓவர்களில் 62 டாட் பந்துகளை வீசி புதிய சாதனை படைத்துள்ளார்.

Afghanistan vs India, 43rd Match, Super 8 Group 1, T20 World Cup 2024

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், குரூப் சுற்று போட்டியில் இந்தியா விளையாடிய 3 போட்டிகளில் மூன்றிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு சென்றது. கடைசி போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

IND vs AFG, Group 1 T20 World Cup 2024

இந்தியா தவிர ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில், நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 சுற்று போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது.

Tap to resize

India vs Afghanistan Super 8 T20 World Cup 2024

இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 53 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்டியா 32 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். பின்னர் விளையாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் ஆப்கானிஸ்தானின் அனைத்து பேட்ஸ்மேன்களும் கேட்சால் ஆட்டமிழந்துள்ளனர்.

T20 World Cup 2024

இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலாக பெர்த்தில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் கேட்ச் மூலமாக இழந்தது.

IND vs AFG T20 World Cup 2024

இந்த நிலையில் தான் இதுவரையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா வீசிய 15 ஓவர்களில் 62 டாட் பந்துகள் வீசி புதிய சாதனை படைத்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியி 4 ஓவர்கள் வீசிய புர்மா ஒரு மெய்டன் உள்பட 7 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்தப் போட்டியில் 24 பந்துகளில் பும்ரா 20 டாட் பந்துகள் வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

IND vs AFG T20 World Cup 2024

இந்தப் போட்டியில் பும்ராவைத் தொடர்ந்து அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், அக்‌ஷர் படேல் ஒரு விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!