Virat Kohli: தோனி, ரோகித் யாரும் இல்லை – விராட் கோலியே சிறந்த பேட்ஸ்மேன் – ஜேம்ஸ் ஆண்டர்சன் பாராட்டு!

First Published | Aug 27, 2024, 9:47 PM IST

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஜேம்ஸ் ஆண்டர்சன், விராட் கோலியை சிறந்த ஒயிட் பால் பேட்ஸ்மேன் என்று புகழ்ந்துள்ளார். கோலிக்கு எதிராக பல போட்டிகளில் விளையாடிய அனுபவத்தில் இருந்து, அவரை மிஞ்ச யாரும் இல்லை என்று ஆண்டர்சன் கூறியுள்ளார்.

Virat Kohli

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் விராட் கோலி தான் சிறந்த ஒயிட் பால் பேட்ஸ்மேன் என்றும் அவரைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும் கூறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 188 போட்டிகளில் விளையாடி சிறந்த ஜாம்பவானாக திகழும் ஆண்டர்சன், கோலிக்கு எதிராக நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Virat Kohli and James Anderson

ஆண்டர்சன் மட்டுமின்றி சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி என்று பலரால் பாராட்டப்பட்டுள்ளார். மேலும், முன்னாள் இந்திய கேப்டனான விராட் கோலியை விட சிறந்த ஒயிட் பால் கிரிக்கெட் வீரர் அல்லது பினிஷர் யாரும் இல்லை என்று ஆண்டர்சன் கூறியுள்ளார். விராட் கோலி மற்றும் ஆண்டர்சன் இருவரும் 36 இன்னிங்ஸ்களில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் ஆண்டர்சன் பந்துவீச்சில் கோலி 7 முறை ஆட்டமிழந்துள்ளார். அதோடு 43.57 சராசரியில் 305 ரன்கள் எடுத்துள்ளார்.

Tap to resize

James Anderson and Virat Kohli

2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் ​​கோலி 4 முறை ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கோலி, 2018 ஆம் ஆண்டு ஆவேசமாக விளையாடி 5 டெஸ்ட் போட்டிகளில் 59.30 சராசரியில் 593 ரன்கள் குவித்துள்ளார்.

Virat Kohli Best White Ball Batsman

இது குறித்து ஆண்டர்சன் கூறியிருப்பதாவது: விராட் கோலியை விட சிறந்த பேட்ஸ்மேன் இருந்ததாக எனக்கு தெரியாது. சேஸிங்கில் கில்லாடி. ஏராளமான சாதனைகளை தனக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளார். பெரும்பாலும் 2ஆவது இன்னிங்ஸில் தான் அதிக சதங்கள் விளாசியுள்ளார். விராட் கோலிக்கு பிறகு ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் பெவன் சிறந்த பினிஷராக அறியப்பட்டார் என்று கூறினார். ஆனால், பெவனை விட விராட் கோலியே சிறந்த பேட்ஸ்மேன் என்று ஆணித்தனமாக கூறியுள்ளார்.

Latest Videos

click me!