Zaheer Khan vs Mitchell Johnson: ஜாகீர் கானின் Revenge சைலண்டான ஜான்சன்: கோபத்தால் கொந்தளித்த யார்க்கர் KING!

First Published | Aug 27, 2024, 6:06 PM IST

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஜான்சன், ஜாகீர் கானின் பந்துகளை எதிர்கொண்டபோது ஏற்பட்ட மோதல் குறித்த சுவாரஸ்ய தகவல்கள். ஜான்சனின் நக்கல் சிரிப்புக்கு களத்தில் ஜாகீர் கான் எப்படி பதிலடி கொடுத்தார் என்பதை அறிய படிக்கவும்.

Zaheer Khan

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஜான்சன் பேட்டிங் செய்ய வந்தார். அப்போது ஜாகீர் கான் பவுலிங் செய்தார். அவரது யார்க்கர் பந்தை தடுத்த ஜான்சன், ஜாகீர் கானை பார்த்து நக்கலாக சிரிப்பார்.

Zaheer Khan

இதே போன்று அடுத்த பந்தில் பவுண்டரி அடித்த ஜான்சன் மீண்டும் நக்கலாக சிரிப்பார். இதனால், கோபம் அடைந்த ஜாகீர் கான் தரமான பதிலடியாக ஸ்விங் பந்து வீசி ஜான்சனை கிளீன் போல்டாக்கினார். இதையடுத்து ஜாகீர் கான் ஆக்ரோஷமாக கத்தினார். இது போன்ற சம்பவம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் அடிக்கடி நடக்கும்.

Tap to resize

Indian Cricket Team

இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளராக ஏராளமான சாதனைகளை படைத்தவர் ஜாகீர் கான். இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழ்ந்தார். 2000 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 92 போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளும், ஒருநாள் கிரிக்கெட்டில் 200 போட்டிகளில் விளையாடி 282 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார்.

Zaheer Khan vs Mitchell Johnson

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்காக பல போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த நிலையில் தான் ஆக்ரோஷத்திற்கு பெயர் போன ஜாகீர் கான் தனது ஓவரில் யாருமே அடிக்க கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர். யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் என்று கூட சொல்லலாம். பேட்ஸ்மேனே அடிக்க திணறும் ஒரு பவுலர் அடித்தால் எப்படி இருக்கும்.

Mitchell Johnson vs Zaheer Khan

அப்படித்தான் ஜான்சன் தனது யார்க்கர் பந்தை தடுத்ததோடு மட்டுமின்றி அடுத்த பந்தில் பவுண்டரி அடித்ததால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ஜாகீர் கான் தரமான பதிலடியாக அவரை கிளீன் போல்டாக்கி அசத்தியுள்ளார்.

Mitchell Johnson vs MS Dhoni

ஜாகீர் கான் மட்டுமின்றி ஒருநாள் கிரிக்கெட்டில் தோனியின் கோபத்திற்கு ஆளான ஜான்சன் ஓவரை சரமாரியாக வெளுத்து வாங்கினார். அந்தப் போட்டியில் தோனி சதமும் விளாசியிருப்பார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நாக்பூரில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 354 ரன்கள் குவித்தது.

MS Dhoni ODI, IND vs AUS

இந்தப் போட்டியில் தோனி அதிரடியாக விளையாடி 107 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 124 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் தோனி ரன் ஓடும் போது ஜான்சன் குறுக்கே வர தோனி கீழே விழுவார்.

MS Dhoni

இதனால் ஆத்திரமடைந்த தோனி அவருக்கு தனது பேட்டால் பதிலடி கொடுத்திருப்பார். அதற்கு முன் ஜான்சன் வீசிய பந்து தோனியின் ஹெல்மெட்டை தாக்கியது. இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற தோனி தரமான பதிலடி கொடுத்திருப்பார்.

Latest Videos

click me!