India vs Bangladesh Test Cricket
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணியானது 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் வரும் 19 ஆம் தேதி தொடங்குகிறது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
Ravichandran Ashwin
ஆனால், அதற்கு முன்னதாக வங்கதேச அணியானது இந்திய அணிக்கு ஒரு எச்சரிக்கை மணி அடித்துள்ளது. அது என்னவென்றால் பாகிஸ்தான் சென்றுள்ள வங்கதேச அணியானது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஏற்கனவே ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியானது 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.
Ashwin and Jadeja Combo
பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் வங்கதேச அணி சிறப்பாக விளையாடி இந்த வெற்றியை பதிவு செய்திருக்கிறது. வங்கதேச அணியைப் பொறுத்த வரையில் முஷ்பிகுர் ரஹீம் 191 ரன்கள் குவித்தார். மெஹிடி ஹசன் மிராஸ் 77 ரன்கள் எடுத்தார்.
IND vs BAN Test Cricket
பவுலிங்கைப் பொறுத்த வரையில் மெஹிடி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டும், ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும் கைப்பற்றினர். 2ஆவது போட்டி வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரைத் தொடர்ந்து இந்தியா வரும் வங்கதேச அணியானது இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்திய அணிக்கு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது.
Bangladesh Tour of India
இதற்கு முன்னதாக இரு அணிகளும் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், இந்தியா 11 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. 2 போட்டி டிராவில் முடிந்துள்ளது. 3 போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றது. மேலும், 8 போட்டிகள் அவே மைதானத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானை வீழ்த்தியது போன்று வங்கதேச அணியானது வரலாற்று வெற்றிய நோக்கி இந்தியாவில் கால் பதிக்கிறது.
Test
ஆனால், அவர்களை எதிர்க்க கூடிய சக்தி சுழற்பந்து ஜாம்பவான்களான ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரிடம் உள்ளது. ஆனால், தேர்வுக்குழு அஸ்வின் மற்றும் ஜடேஜா காம்போவைத் தான் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கும் நிலையில் 3ஆவது ஸ்பின்னராக குல்தீப் யாதவ் அல்லது அக்ஷர் படேலுக்கு வாய்ப்பு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Test Cricket
ஏற்கனவே அஸ்வின் மற்றும் ஜடேஜா காம்போ டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 போட்டிகளில் விளையாடி இருவரும் இணைந்து 506 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். அஸ்வின் 50 போட்டிகளில் 277 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஜடேஜா 229 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதுவரையில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 516 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
India vs Bangladesh Test Cricket
இந்த ஜோடியைத் தவிர சீரான இடைவெளியில் அக்ஷர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஜோடியும் இந்திய அணிக்கு விக்கெட்டுகள் எடுத்துக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டி என்பதால் அஸ்வினுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
India vs Bangladesh Test
இதுவரையில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. கடைசியாக இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அதன் பிறகு ஐபிஎல், டி20, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை என்று தொடர்ந்து ஒயிட் பால் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.