16 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி மன்னன் வீரேந்திர சேவாக் சாதனையை அசால்ட்டா முறியடித்த மெக்கர்க்!

First Published | Apr 27, 2024, 5:07 PM IST

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 43ஆவது ஐபிஎல் போட்டியில் டெல்லி வீரர் அதிரடியாக விளையாடி முதல் ஓவரில் மட்டும் 19 ரன்கள் எடுத்ததன் மூலமாக வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடித்துள்ளார்.

Delhi Capitals vs Mumbai Indians, 43rd Match

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 43ஆவது லீக் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். மும்பை அணியில் லூக் உட் இடம் பெற்றார். இதே போன்று டெல்லி அணியில் குமார் குஷாக்ரா இடம் பெற்றுள்ளார்.

Delhi Capitals vs Mumbai Indians, 43rd Match

டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஜாக் பிரேசர் மெக்கர்க் மற்றும் அபிஷேக் போரெல் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், முதல் ஓவரை லூக் உட் வீசினார். இந்த ஓவரில் முதல் பந்து முதல் கடைசி பந்து வரை மெக்கர்க் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார்.

Tap to resize

Delhi Capitals vs Mumbai Indians, 43rd Match

முதல் ஓவரில் மெக்கர்க் 4, 4, 6,0, 4, 1 என்று வரிசையாக 19 ரன்கள் குவித்து சேவாக்கின் சாதனையை முறியடித்தார். முதல் ஓவரில் அதிக ரன்கள் குவித்தவர்களின் வரிசையில் 2ஆவது இடம் பிடித்தார்.

Delhi Capitals vs Mumbai Indians, 43rd Match

இதற்கு முன்னதாக கடந்த 2021ல் கேகேஆர் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் வீரர் பிரித்வி ஷா 21 ரன்கள் குவித்தார். இதே போன்று, 2008 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் வீரர் வீரேந்திர சேவாக் 18 ரன்கள் குவித்தார்.

Delhi Capitals vs Mumbai Indians, 43rd Match

தற்போது 18 ரன்கள் எடுத்த வீரேந்திர சேவாக்கின் சாதனையை டெல்லி கேபிடல்ஸ் வீரர் மெக்கர்க் 19 ரன்கள் எடுத்து முறியடித்துள்ளார். முதல் 2 ஓவர்களில் கேபிடல்ஸ் 37 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த அணிகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

Delhi Capitals vs Mumbai Indians, 43rd Match

டெல்லி கேபிடல்ஸ் 3 ஓவர்களில் 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இதில்,46 ரன்கள் மெக்கர்க் எடுத்தது. கடைசியில் 15 பந்துகளில் 52 ரன்கள் குவித்து குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 20 ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் 15 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். தற்போது 2ஆவது முறையாக 15 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

Delhi Capitals vs Mumbai Indians, 43rd Match

மேலும், 15 பந்துகளில் 2 முறை அரைசதம் அடித்தவர்களில் பட்டியலில் ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன் வரிசையில் தற்போது ஜாக் பிரேசர் மெக்கர்க்கும் இடம் பெற்றுள்ளார். பவர்பிளேயில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் குவித்துள்ளது. இதில், 78 ரன்களை மெக்கர்க் எடுத்துள்ளார். கடைசியில் மெக்கர் 27 பந்துகளில் 11 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 84 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.

Latest Videos

click me!