இஷான் கிஷான்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்யவே, ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.
சூர்யகுமார் யாதவ்
இதில், ஸ்டீவ் ஸ்மித் 52 ரன்களும், ஜோஷ் இங்கிலிஸ் 110 ரன்களும் எடுத்தனர். இறுதியாக 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா 208 ரன்கள் எடுத்தது.
விசாகப்பட்டினம் - டி20 போட்டி
பின்னர், கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஷ்வாலும் 8 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலியா
இதையடுத்து, இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இஷான் 37 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். இந்தப் போட்டியில் முதலில் 4 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக ஒரு விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் சாதனையை சமன் செய்தார்.
இந்தியா – ஆஸ்திரேலியா டி20 போட்டி
டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பராக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களில் ரிஷப் பண்ட் 4 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் இருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் 42 பந்துகளில் 65* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த நிலையில், நேற்றைய போட்டியில் இஷான் கிஷான் 39 பந்துகளில் 2 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 58 ரன்கள் எடுத்து ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்துள்ளார்.