IPL 2023: என்றைக்குமே நான் தான்டா கெத்து; இந்திய அணிக்கு பேட்டிங்கில் நிரூபித்த சீனியர் வீரர் - இர்ஃபான் பதான்

Published : Apr 06, 2023, 04:10 PM ISTUpdated : Apr 06, 2023, 04:11 PM IST

இந்திய அணியில் தன்னை சேர்ப்பதும் நீக்குவதுமாக இருந்ததால் கடும் அதிருப்தியடைந்த ஷிகர் தவான், தனது திறமையை நிரூபிக்கும் விதமாக ஐபிஎல்லில் அசத்திவருவதாக இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.  

PREV
17
IPL 2023: என்றைக்குமே நான் தான்டா கெத்து; இந்திய அணிக்கு பேட்டிங்கில் நிரூபித்த சீனியர் வீரர் - இர்ஃபான் பதான்

இந்திய அணி ஒருநாள் உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகிறது. 2011ம் ஆண்டுக்கு பின் மீண்டும் இந்திய மண்ணில் உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று தீவிரமாக தயாராகிவருகிறது இந்திய அணி. இந்திய அணியின் ஆடும் லெவன் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது. 
 

27

ஓபனிங்கை பொறுத்தமட்டில் ரோஹித்துடன் ஷுப்மன் கில் இறங்குவது உறுதியாகிவிட்டது. ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித்துடன் சேர்ந்து பல அருமையான தொடக்கங்களை அமைத்து கொடுத்து இந்திய அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியவர் ஷிகர் தவான். 

37

உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மிகப்பெரிய ஐசிசி தொடர்களில் மிகச்சிறப்பாக ஆடக்கூடிய வெகுசில வீரர்களில் ஷிகர் தவானும் ஒருவர். ரோஹித்துடன் இணைந்து ஓபனிங்கில் பல சாதனைகளை படைத்துள்ளார். 167 ஒருநாள் போட்டிகளில் ஆடி 6793 ரன்களை குவித்துள்ளார் ஷிகர் தவான். 

IPL 2023: ஐபிஎல் 16வது சீசனில் கண்டிப்பாக அந்த அணி தான் கோப்பையை வெல்லும்; RCB இல்ல! டிவில்லியர்ஸ் திட்டவட்டம்

47

2022ம் ஆண்டு 22 ஒருநாள் போட்டிகளில் ஆடி 70 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் ஆடி 688 ரன்களை அடித்துள்ளார். ஷிகர் தவான் நன்றாக ஆடினாலும், ஒருநாள் கிரிக்கெட்டின் அணுகுமுறை மாறிவிட்ட நிலையில், அதிரடியான ஓபனிங்கிற்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுக்கப்படுகிறது. அந்தவகையில் வங்கதேசத்துக்கு எதிராக இஷான் கிஷன் இரட்டை சதமடிக்க, அவரைத்தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக ஷுப்மன் கில் இரட்டை சதமடித்தார். இவர்கள் இருவரது இரட்டை சதங்களால் ஷிகர் தவான் ஒருநாள் அணியிலிருந்து மொத்தமாக ஒதுக்கப்பட்டார். 

57

37 வயதான ஷிகர் தவான் ஐபிஎல்லில் பல சீசன்களாக தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திவருபவர். ஒவ்வொரு சீசனிலும் குறைந்தபட்சம் 400 ரன்களை கண்டிப்பாக அடித்துவிடுவார். இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுகிறார். ஷிகர் தவான் இந்த ஐபிஎல்லில் பேட்ஸ்மேனாக மட்டுமல்லாது கேப்டனாகவும் ஜொலித்துவருகிறார். ஷிகர் தவானின் கேப்டன்சியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, இந்த சீசனில் ஆடிய முதல் 2 போட்டிகளிலும் கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை வீழ்த்தி வெற்றி கண்டது.

67

கேகேஆருக்கு எதிராக 40 ரன்கள் அடித்திருந்த தவான், ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி 56 பந்தில் 86 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். 56 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசி, 37 வயதிலும் செம கெத்தாக ஆடினார் தவான்.

IPL 2023:சீனியர் வீரரை தூக்கி எறியும் KKR! வேற வழியின்றி RCB-யில் ஒரு மாற்றம்! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

77

இந்நிலையில், தவான் குறித்து பேசியுள்ள இர்ஃபான் பதான், ஐபிஎல்லில் ஆடும் வீரர்களில் ஷிகர் தவான் சீனியர் வீரர். ஆனாலும் தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார். பவர்ஃபுல்லான பிளேயர் தவான். மன வலிமையும் கொண்டவர். கேப்டன்சி திறனையும் நிரூபித்துள்ளார். இந்திய அணியில் எடுப்பதும் தூக்குவதுமாக இருந்தது ஷிகர் தவானை மனதளவில் பாதித்துள்ளது. அதனால் தான் தனது திறமையையும் கெத்தையும் நிரூபிக்கும் முனைப்பில் அபாரமாக ஆடிவருவதாக இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories