ஐபிஎல் 16வது சீசன் கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஐபிஎல்லில் பல முறை கோப்பையை மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளன.
கடந்த சீசனில் அறிமுகமாகி அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்று சாதனை படைத்த குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனின் முதலிரண்டு போட்டிகளிலும் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது குஜராத் டைட்டன்ஸ் அணி. கடந்த சீசனை போலவே இந்த சீசனிலும் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்றுவருகிறது குஜராத் அணி.
ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் ஷுப்மன் கில், சாய் சுதர்சன், டேவிட் மில்லர், என வலுவான பேட்டிங் ஆர்டரையும், ரஷீத் கான், ராகுல் டெவாட்டியா ஆகிய ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் மற்றும் ஷமி, அல்ஸாரி ஜோசஃப் என தரமான ஃபாஸ்ட் பவுலிங் என அனைத்து வகையிலும் சிறந்த வீரர்களை கொண்ட பேலன்ஸான மற்றும் வலுவான அணியாக களமிறங்கி நல்ல வியூகத்துடன் மிகச்சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற்று இந்த சீசனிலும் ஆதிக்கம் செலுத்துகிறது குஜராத் டைட்டன்ஸ் அணி.
ஐபிஎல்லில் ஜாலியா ஆடிகிட்டு இருக்கும் ரோஹித், கோலியின் சர்வதேச கிரிக்கெட் கெரியருக்கு ஆப்பு..?
இந்நிலையில், இந்த சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்பது குறித்து பேசிய ஏபி டிவில்லியர்ஸ், நீண்டகாலம் முன்பே ஐபிஎல் ஏலத்தின்போது குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து கோப்பையை வெல்லும் என்று நான் கூறியிருந்தேன். இப்போதும் அதையே கூறுகிறேன்.. குஜராத் டைட்டன்ஸ் அணி தான் இந்த சீசனில் ஐபிஎல் கோப்பையை வெல்லும். ஆர்சிபி அணி ஜெயிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணி தான் இந்த சீசனில் டைட்டில் ஜெயிக்கும் என்று ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.