ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் போட்டியில் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.
26
முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற ஆர்சிபி அணி வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் களமிறங்குகிறது.
36
முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸிடம் தோற்ற கேகேஆர் அணி வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் களமிறங்குகிறது. இந்த போட்டிக்கான கேகேஆர் அணியில் ஒரு மாற்றம் செய்யப்படும். நியூசிலாந்து சீனியர் ஃபாஸ்ட் பவுலர் டிம் சௌதிக்கு பதிலாக மிரட்டலான வேகத்தில் வீசக்கூடிய லாக்கி ஃபெர்குசன் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.
ஆர்சிபி அணியின் ஃபாஸ்ட் பவுலர் ரீஸ் டாப்ளி முதல் போட்டியில் காயத்தால் களத்தைவிட்டு வெளியேறினார். அதனால் அவர் இந்த போட்டியில் ஆடமுடியாது. அவருக்கு பதிலாக இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி ஆடுவர்.