IPL 2023: அக்ஸர் படேல் அதிரடி ஃபினிஷிங்.. தட்டுத்தடுமாறி நல்ல ஸ்கோரை அடித்த DC..! GTக்கு சவாலான இலக்கு

Published : Apr 04, 2023, 09:53 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணி, 20 ஓவரில் 162 ரன்கள் அடித்து 163 ரன்கள் என்ற சவாலான இலக்கை குஜராத் டைட்டன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.  

PREV
15
IPL 2023: அக்ஸர் படேல் அதிரடி ஃபினிஷிங்.. தட்டுத்தடுமாறி நல்ல ஸ்கோரை அடித்த DC..! GTக்கு சவாலான இலக்கு

ஐபிஎல் 16வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. டெல்லி அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 

25

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், முகமது ஷமி, ஜோஷுவா லிட்டில், யஷ் தயால், அல்ஸாரி ஜோசஃப். 
 

35

டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, டேவிட் வார்னர் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ரைலீ ரூசோ, சர்ஃபராஸ் கான் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், அபிஷேக் போரெல் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், சேத்தன் சக்காரியா, கலீல் அகமது, அன்ரிக் நோர்க்யா.
 

45

முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா 7 ரன்களுக்கும், மிட்செல் மார்ஷ் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். நிதானமாக நின்று ஆடிய டேவிட் வார்னரும் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ரைலீ ரூசோ ரன்னே அடிக்காமல் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார். 
 

55

களத்தில் பொறுப்புடன் நின்று ஆடிய சர்ஃபராஸ் கான் பொறுப்பை தனது தோள்களில் சுமந்ததால் நிதானமாக ஆடி 34 பந்தில் 30 ரன்கள் அடித்திருந்த நிலையில், ரஷீத் கான் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். அறிமுக வீரர் அபிஷேக் போரெல் 11 பந்தில் 20 ரன்கள் அடித்து அவரும் ரஷீத் கான் பவுலிங்கில் அவுட்டானார். அக்ஸர் படேல் நின்று ஆடி டெத் ஓவரில் அடித்து ஆடி 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் அடித்து இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். இதையடுத்து 20 ஓவரில் 162 ரன்கள் அடித்து, 163 ரன்கள் என்ற சவாலான இலக்கை குஜராத் டைட்டன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories