IPL 2023:போன மேட்ச்சில் நீ ஆடிய லெட்சணத்தை பார்த்தோமே! தமிழக வீரரை தூக்கி எறிந்த GT.! DC vs GT டாஸ் ரிப்போர்ட்

Published : Apr 04, 2023, 07:37 PM IST

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.   

PREV
15
IPL 2023:போன மேட்ச்சில் நீ ஆடிய லெட்சணத்தை பார்த்தோமே! தமிழக வீரரை தூக்கி எறிந்த GT.! DC vs GT டாஸ் ரிப்போர்ட்

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸிடம் தோற்ற டெல்லி கேபிடள்ஸ் அணி வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியுள்ளது. முதல் போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி 2வது வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியுள்ளது. டெல்லியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 

25

குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல் போட்டியில் விஜய் சங்கர் 21 பந்தில் 27 ரன்கள் மட்டுமே அடித்தார். சிஎஸ்கேவிற்கு எதிராக இலக்கை விரட்டும்போது அடித்து ஆட வேண்டிய சூழல் இருந்த நிலையில், பெரிய ஷாட்டுகளை ஆடமுடியாமல் திணறிய விஜய் சங்கரை நீக்கிவிட்டு, கடந்த போட்டியில் இம்பேக்ட் பிளேயராக ஆடிய சாய் சுதர்சனை நேரடியாக அணியில் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.
 

35

டெல்லி கேபிடள்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரோவ்மன் பவல் நீக்கப்பட்டு, ரிஷப் பண்ட்டுக்கு மாற்றாக எடுக்கப்பட்ட அபிஷேக் போரெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அன்ரிக் நோர்க்யாவும் இந்த போட்டியில் ஆடுகிறார்.
 

45

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், முகமது ஷமி, ஜோஷுவா லிட்டில், யஷ் தயால், அல்ஸாரி ஜோசஃப். 
 

55

டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, டேவிட் வார்னர் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ரைலீ ரூசோ, சர்ஃபராஸ் கான் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், அபிஷேக் போரெல் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், சேத்தன் சக்காரியா, கலீல் அகமது, அன்ரிக் நோர்க்யா.
 

Read more Photos on
click me!

Recommended Stories