ஆஸ்திரேலிய வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. இந்த நிதியாண்டுக்கான புதிய ஒப்பந்தத்தில் 6 வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஆஷஸ் தொடர் மற்றும் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடக்கவுள்ள நிலையில், இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக பந்துவீசிய இளம் ஸ்பின்னர் டாட் மர்ஃபி ஊதிய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். மார்கஸ் ஹாரிஸும் இடம்பெற்றுள்ளார்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் வருடாந்திர ஊதிய ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள வீரர்கள்:
பாட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், நேதன் லயன், கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், அலெக்ஸ் கேரி, அஷ்டான் அகர்.
IPL 2023:சீனியர் வீரரை தூக்கி எறியும் KKR! வேற வழியின்றி RCB-யில் ஒரு மாற்றம்! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
ஊதிய ஒப்பந்தத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வீரர்கள்:
சீன் அபாட், மார்கஸ் ஹாரிஸ், லான்ஸ் மோரிஸ், ஜெய் ரிச்சர்ட்ஸன், டாட் மர்ஃபி, மைக்கேல் நெசெர்.