Robo Shankar Death: ரோபோ சங்கர் மறைவுக்கு இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் இரங்கல் தெரிவித்துள்ளார். ரோபோ சங்கர் விரைவில் மறைவை அறிந்து மனம் உடைந்து போனேன் என்று அவர் கூறியுள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழ்ந்தார். சில நாட்களுக்கு முன்பு ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரோபோ சங்கரை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். கல்லீரல் பாதிக்கப்பட்டு ரோபோ சங்கர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
24
இர்பான் பதான் இரங்கல்
46 வயதில் அவர் மண்ணை விட்டு பிரிந்து சென்றுள்ளது அவரது குடும்பத்துக்கு நீங்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒட்டுமொத்த திரையுலகினரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். டெலிவிஷன் நிகழ்ச்சியில் தனது திறைமையை வளர்த்து பின்பு வெள்ளித்திரையில் திறமையை நிலைநாட்டி மக்கள் மனதில் இடம்பிடித்த ரோபோ சங்கரின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.
மனம் உடைந்து போனேன்
இந்நிலையில், ரோபோ சங்கரின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் இர்பான் பதான் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இர்பான் பதான் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''ரோபோ சங்கர் விரைவில் இறந்து போனது அறிந்து மனம் உடைந்து போனேன். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
34
ரோபோ சங்கர் முகத்தில் புன்னகை மலரும்
அப்போது ஒருவர் ரோபோ சங்கரின் நடிப்பை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கமெண்ட்டில் கேட்டார். இதற்கு பதில் அளித்த இர்பான் பதான், ''நாங்கள் ஒரு தமிழ் படத்தில் பணியாற்றியுள்ளோம். அவர் எப்போதும் மிகவும் பணிவானவர். நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் அவரது முகத்தில் புன்னகை மலர்ந்தது'' என்று தெரிவித்துள்ளார்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் கோப்ரா. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இந்த படத்தில் ரோபோ சங்கரும் நடித்திருந்தார். இதேபோல் இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் இந்த படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இர்பான் பதான் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தை தான் இர்பான் பதான் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.