நடப்பு தொடரில் பலமுறை நடத்தை விதிகளை மீறியதாக ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி சன்ஜோக் குப்தா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் மின்னஞ்சல் மூலம் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியின் போது, வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் குறித்து பலமுறை எச்சரித்தும், பாகிஸ்தான் அணி நடத்தை விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் ஐசிசி தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
விதிகளை மீறி அட்டூழியம்
ஐக்கிய அரபு அமீரக போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா மற்றும் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸனை போட்டி நடுவர் ஆன்டி பைக்ராஃப்ட் சந்தித்தார். இந்த சந்திப்பை வீடியோ எடுக்க வேண்டாம் என எச்சரித்தும், பாகிஸ்தானின் ஊடக மேலாளர் அதை கேமராவில் பதிவு செய்து, ஆன்டி பைக்ராஃப்ட் மன்னிப்பு கேட்டதாகக் கூறி அந்தப் படங்களையும் வீடியோவையும் சமூக ஊடகங்களில் பரப்பினார்.