Umran Malik: இந்திய அணியில் இடம்பிடித்த உம்ரான்.. மகிழ்ச்சியில் இர்ஃபான் பதான்..! குரு - சிஷ்யன் கொண்டாட்டம்

First Published May 23, 2022, 9:26 PM IST

ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசியதன் விளைவாக இந்திய அணியில் இடம்பிடித்த உம்ரான் மாலிக், அந்த சந்தோஷத்தை தனது வழிகாட்டியான இர்ஃபான் பதானுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
 

ஐபிஎல் 15வது சீசனில் துல்லியமான லைன்&லெந்த்தில் அதிவேகமாக பந்துவீசி அனைவரையும் கவர்ந்தவர் உம்ரான் மாலிக். 157 கிமீ வேகத்தில் உம்ரான் மாலிக் வீசியதுதான் இந்த சீசனின் அதிவேக பந்து. 155 கிமீ வேகத்தில் அவர் வீசியதுதான் 2வது அதிவேக பந்து.

அதிவேக பந்துகளை நல்ல ஏரியாக்களில் வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்ட உம்ரான் மாலிக், 14 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி ஆடிய அனைத்து போட்டிகளிலும் அதிவேக பந்தை வீசியதற்கான விருதை (14 முறை) அவர் தான் வென்றார். இதுவொரு வரலாற்றுச்சாதனை.
 

உம்ரான் மாலிக் ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசியதன் விளைவாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். ஆடும் லெவனிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

உம்ரான் மாலிக்கின் வளர்ச்சியில் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டர் இர்ஃபான் பதானுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிவரும் இர்ஃபான் பதான் தான், உம்ரான் மாலிக்கை அடையாளம் கண்டு, அவரது குறைகளை நிவர்த்தி செய்து ஒரு முழு ஃபாஸ்ட் பவுலராக வளர்த்துவிட்டவர். இதை உம்ரான் மாலிக்கே கூறியிருக்கிறார்.

எனவே உம்ரான் மாலிக்கின் வளர்ச்சி ஒரு வழிகாட்டி மற்றும் பயிற்சியாளர் என்ற முறையில் இர்ஃபான் பதானுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கும். 
 

அந்தவகையில், உம்ரான் மாலிக் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதை அவருடன் இணைந்து இர்ஃபான் பதான் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த புகைப்படங்களை இர்ஃபான் பதான் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில், அவை செம வைரலாகிவருகின்றன.
 

click me!