கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்! ஐபிஎல் டிக்கெட் விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?

Published : Sep 04, 2025, 04:51 PM IST

ஜிஎஸ்டி 2.0 புதிய சீர்திருத்தங்களால் ஐபிஎல் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது. எவ்வளவு உயர்ந்துள்ளது? என்பது குறித்து பார்க்கலாம்.

PREV
14
ஜிஎஸ்டி 2.0 புதிய சீர்திருத்தங்கள்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி 2.0 புதிய சீர்திருத்தங்களின் அடிப்படையில் ஐபிஎல் டிக்கெட்டுகள் தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட 40% வரி பிரிவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட் விலை அதிகரித்துள்ளது. முன்பு 28% ஆக இருந்த வரி இப்போது 40% ஆக உயர்த்தப்பட்டிருப்பதால் ஐபிஎல் டிக்கெட் விலையும் உயர்ந்துள்ளது.

24
ஐபிஎல் டிக்கெட் விலை உயர்வு

முன்பு ரூ.1,000 ஆக இருந்த டிக்கெட் விலை இப்போது ரூ.1,400 ஆகவும், ரூ.2,000 டிக்கெட் விலை ரூ2,800 ஆகவும், ரூ.5,000 பாஸ் ரூ.7,000 ஆகவும் அதிகரித்துள்ளது. ஐபிஎல் 2026 சீசனின்போது இந்த டிக்கெட் விலை உயர்வு எதிரொலிக்கும். மத்திய அரசு நான்கு அடுக்கு ஜிஎஸ்டி அமைப்பு முறையை இரண்டு முக்கிய அடுக்குகளாக (5% மற்றும் 18%) குறைத்துள்ளது. அதே வேளையில் ஆடம்பர மற்றும் கேளிக்கைப் பொருட்களுக்குப் புதிதாக 40% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ் தான் ஐபிஎல் போன்ற நேரடி விளையாட்டு நிகழ்வுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

34
மருந்துகள் விலை குறையும்

அதே வேளையில் சோப்பு, ஷாம்பு, பாக்கெட் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்ற அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் 18% இல் இருந்து 5% ஆகக் குறைந்துள்ளன. சிறிய கார்கள், தொலைக்காட்சிகள் மற்றும் ஏர் கண்டிஷனர்கள் போன்ற பெரிய பொருட்கள் 28% இல் இருந்து 18% வரி விகிதத்தின் கீழ் வந்துள்ளன.

44
பால் பொருட்கள் ஜிஎஸ்டியும் குறைப்பு

இதேபோல் விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் விதமாக வேளாண் பொருட்களுக்கான ஜிஎஸ்டியும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அல்ட்ரா ஹை டெம்பரேச்சர் (UHT) பால் மற்றும் பனீர் இவற்றின் மீதான 5% ஜிஎஸ்டி முழுமையாக ரத்து செய்யப்பட்டு வரி இல்லாத பொருட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. சுண்டக் காய்ச்சிய பால், வெண்ணெய், பிற கொழுப்புகள் மற்றும் சீஸ் இவற்றின் மீதான ஜிஎஸ்டி 12% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories