
ஐபிஎல் 2024 ஏலம்:
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆது சீசனுக்கான ஏலம் இன்று பிற்பகல் 1 மணிக்கு துபாயில் உள்ள கோகோ கோலா அரேனா அரங்கத்தில் நடக்க இருக்கிறது. பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சாமில்லாத ஐபிஎல் 2024 தொடருக்கான ஏலத்திற்கு ஒவ்வொரு அணியும் தயாராகி வருகிறது.
ஒளிபரப்பு:
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டுக்கான ஏலமானது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதோடு, ஜியோ சினிமாவிலும் லைவ் ஸ்டிரீமிங் செய்யப்படுகிறது.
ஏலம் எடுக்கப்படும் வீரர்கள் – மொத்தம் 77
இந்த ஏலத்திற்கு பதிவு செய்த 1166 வீரர்களில் 833 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், 333 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்கின்றனர். இதில், 214 இந்திய வீரர்கள் மற்றும் 2 அசோசியேட் வீரர்கள் உள்பட 119 வெளிநாட்டு வீரர்கள்.
அதுமட்டுமின்றி இதில், 116 வீரர்கள் சர்வதேச போட்டிகளில் இடம் பெற்ற Capped வீரர்கள். 2 அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் உள்பட 215 வீரர்கள் இதுவரையில் ஒரு சர்வதேச போட்டிகளில் கூட இடம் பெறாத Uncapped வீரர்கள். இவர்களில் 77 வீரர்கள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட உள்ளனர். இதில், 30 வீரர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் அணிகளின் பர்ஸ் தொகை:
சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ.31.4 கோடி
குஜராத் ஜெயிண்ட்ஸ் – ரூ.38.15 கோடி
டெல்லி கேபிடல்ஸ் – ரூ. 28.95 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ.32.7 கோடி
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் – ரூ. 13.15 கோடி
மும்பை இந்தியன்ஸ் – ரூ.17.75 கோடி
பஞ்சாப் கிங்ஸ் – ரூ.29.1 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ.34 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ.14.5 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ.23.25 கோடி
ஏலத்தில் பங்கேற்கும் இளம் வயது மற்றும் வயதான வீரர்கள் யார்?
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 17 வயதான குவேனா மபாகா, ஐபிஎல் 2024 ஏலத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் கிரிக்கெட் வீரர் ஆவார். ஆப்கானிஸ்தானின் 38 வயதான முகமது நபி ஐபிஎல் 2024 ஏலத்திற்கான தேர்வுப்பட்டியலில் மிகவும் வயதான வீரர் ஆவார்.
ஏலத்தை நடத்துபவர் யார்?
துபாயில் நடத்தப்படும் ஐபிஎல் 2024 ஏலத்தினை முதல் முறையாக மல்லிகா சாகர் நடத்துகிறார். இவர், இதற்கு முன்னதாக மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான ஏலத்தினை சிறப்பாக நடத்தியுள்ளார்.
ஒவ்வொரு அணியிலும் எத்தனை வீரர்கள் ஏலம் எடுக்கப்பட உள்ளனர்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் - 6 (வெளிநாட்டு வீரர்கள் 3)
டெல்லி கேபிடல்ஸ் - 9 (வெளிநாட்டு வீரர்கள் 4)
குஜராத் ஜெயிண்ட்ஸ் - 8 (வெளிநாட்டு வீரர்கள் 2)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 12 (வெளிநாட்டு வீரர்கள் 4)
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - 6 (வெளிநாட்டு வீரர்கள் 2)
மும்பை இந்தியன்ஸ் - 8 (வெளிநாட்டு வீரர்கள் 4)
பஞ்சாப் கிங்ஸ் - 8 (வெளிநாட்டு வீரர்கள் 2)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 6 (வெளிநாட்டு வீரர்கள் 3)
ராஜஸ்தான் ராயல்ஸ் - 8 (வெளிநாட்டு வீரர்கள் 3)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 6 (வெளிநாட்டு வீரர்கள் 3)
என்று மொத்தமாக 77 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட இருக்கின்றனர்.
ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியிலும் ஏலம் எடுக்கப்படும் வீரர்கள்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 6 (வெளிநாட்டு வீரர்கள் 3),
டெல்லி கேபிடல்ஸ் 9 (வெளிநாட்டு வீரர்கள் 4)
குஜராத் ஜெயிண்ட்ஸ் 8 (வெளிநாட்டு வீரர்கள் 2)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 12 (வெளிநாட்டு வீரர்கள் 4)
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 6 (வெளிநாட்டு வீரர்கள் 2)
மும்பை இந்தியன்ஸ் 8 (வெளிநாட்டு வீரர்கள் 4)
பஞ்சாப் கிங்ஸ் 8 (வெளிநாட்டு வீரர்கள் 2)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 (வெளிநாட்டு வீரர்கள் 3)
ராஜஸ்தான் ராயல்ஸ் 8 (வெளிநாட்டு வீரர்கள் 3)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 6 (வெளிநாட்டு வீரர்கள் 3) - என்று மொத்தமாக 77 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட இருக்கின்றனர்.