
ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்க இருக்கிறது. இந்த தொடருக்கான ஐபிஎல் ஏலம் வரும் 19ஆம் தேதி நாளை துபாயில் உள்ள கோகோ கோலா அரேனா அரங்கத்தில் நடக்க இருக்கிறது.
இந்த தொடருக்கு தங்களது பெயரை பதிவு செய்த 1166 வீரர்களில் 833 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், 333 வீரர்கள் மட்டுமே ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கின்றனர். இதில், 214 இந்தியர்கள் மற்றும் 119 வெளிநாட்டு வீரர்கள். இந்த 333 வீரர்களில் 77 வீரர்கள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட இருக்கின்றனர். மேலும், இந்த 333 வீரர்களில் 217 Uncapped வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
நாளை நடக்க இருக்கும் ஏலத்தில் மிட்செல் ஸ்டார், ரச்சின் ரவீந்திரா, பேட் கம்மின்ஸ், வணிந்து ஹசரங்கா, கெரால்டு கோட்ஸி, டேரில் மிட்செல், ஷர்துல் தாக்கூர், ஷாருக் கான் உள்ளிட்ட வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டு கவனம் ஈர்க்கப்பட இருக்கின்றனர்.
மிட்செல் ஸ்டார்க்:
உலகக் கோப்பையை வென்ற பந்துவீச்சாளர் 8 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் தொடரில் இடம் பெறுகிறார். பல ஆண்டுகளாக அவர் தனது பெயரை ஏலக் குழுவிலிருந்து திரும்பப் பெற்றுள்ளார். பெரும்பாலான அணிகள் புதிய பந்து ஸ்டிரைக் பவுலரை விரும்புகின்றன, ஸ்டார்க்கைப் போல் பலருக்குப் பொருந்தக்கூடியவர்கள் இல்லை. ஆர்சிபி ஜோஷ் ஹேசில்வுட், எம்ஐ ஜோஃப்ரா ஆர்ச்சர், கேகேஆர் லாக்கி ஃபெர்குசன் ஆகியோரை கைவிட்டது. ஆஸ்திரேலியருக்கு ஏலப் போரை எதிர்பார்க்கலாம், மேலும் அவர் அன்றைய நாளின் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பேட் கம்மின்ஸ்:
மிட்செல் ஸ்டார்க் போன்று பேட் கம்மின்ஸ் ஐபிஎல் தொடரில் அதிக ரன் எடுத்ததில்லை. கடந்த 2020 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரூ.15.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால், 2022 ஆம் ஆண்டு ரூ.7.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பையில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி சாம்பியனானது. ஆதலால், இந்த ஐபிஎல் சீசனில் பேட் கம்மின்ஸ் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ரச்சின் ரவீந்திரா:
உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியில் அறிமுகமான ரச்சின் ரவீந்திரா அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஐபிஎல் தொடரில் ரூ.50 லட்சத்திற்கு அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளார். எனினும், இந்த ஆண்டில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர்களின் டாப் 10 பட்டியலில் அவர் இடம் பெற்றிருந்தாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கேகேஆர் அணியில் ரச்சின் ரவீந்திரா ஏலம் எடுக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது.
ஜெரால்டு கோட்ஸி:
உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜெரால்டு கோட்ஸியும் ஒருவர். உலகக் கோப்பையில் 8 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். போட்டியின் தன்மைக்கு ஏற்ப விக்கெட்டுகள் எடுக்கும் திறன் கொண்டுள்ளார். இவர், ஐபிஎல் தொடரில் ரூ.2 கோடிக்கு அடிப்படை விலையை நிர்ணயித்துள்ளார்.
வணிந்து ஹசரங்கா:
சிறந்த சுழற்பந்து ஆல்ரவுண்டர்களில் ஒருவர். ஆர்சிபி அணியில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் இல்லை என்பதால், வணிந்து ஹசரங்காவை ஏலம் எடுக்க முன்னிலையில் இருக்கும். ஏலத்தில் எடுப்பதற்கு பதிலாக தக்க வைக்கப்பட்டிருக்கலாமே என்று கேட்டால், ரூ.10.75 கோடிக்கு அணியில் இடம் பெற்றிருந்தார். அவரை விடுவித்தால் ரூ.10.75 கோடி ஆர்சிபி அணிக்கு கிடைக்கும். ஆகையால், அவரை விடுவித்து, பின் குறைந்த செலவில் அவரை ஏலத்தில் மீண்டும் எடுப்பதற்கு ஆர்சிபி முயற்சி செய்கிறது என்பது தான். காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் அவர் இடம் பெறவில்லை.
டேரில் மிட்செல்:
2023 உலகக் கோப்பையை சிறப்பாக விளையாடிய மற்றொரு வீரர் டேரில் மிட்செல். வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய சூழ்நிலையில் பேட் செய்ய முடியும் என்று காட்டினார். டெல்லி அணிக்காக விளையாடிய அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் டெல்லி கேபிடல்ஸ் அவரை ஏலத்தில் எடுக்க முன்வரலாம். அப்படியில்லை இல்லை என்றால், அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஏலம் எடுக்கப்படலாம்.
ஷர்துல் தாக்கூர்:
வணிந்து ஹசரங்காவைப் போன்று ஷர்துல் தாக்கூரின் திறமையும் இந்த ஏலத்தில் அரிதானது. நிரூபிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர். போட்டியில் எந்த கட்டத்திலும் பந்து வீசக் கூடியவர். விக்கெட்டுகளை கைப்பற்றும் சாமர்த்தியம் கொண்டவர். வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்காத நிலையிலும் கூட இந்திய அணிக்கு பல போட்டிகளில் விக்கெட் எடுத்து கொடுத்துள்ளார்.
ஷாருக் கான்:
பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர். 2021 ஆம் ஆண்டு ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட தமிழக வீரரான ஷாருக் கான் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ரூ. 9 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு விளையாடினார். ஆனால், பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது தனது அடிப்படை விலையை ரூ.40 லட்சமாக நிர்ணயித்துள்ளார்.