IPL 2024 Auction Dubai: மார்ச் 22ல் ஐபிஎல் தொடங்க வாய்ப்பு – தேர்தலுக்கு பிறகு இறுதி தேதி முடிவு!

First Published | Dec 19, 2023, 9:27 AM IST

2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

IPL Mumbai Indians

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் எனப்படும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியன் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எனப்படும் பிசிசிஐயின் மூலமாக நடத்தப்படும் இந்த தொடரின் முதல் சீசன் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

IPL - Chennai Super Kings

இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியனானது. டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் ஜெயிண்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறையும், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தலா 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

Tap to resize

IPL Start March 22

இதைத் தொடர்ந்து வரும் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நடக்க இருக்கிறது. இதற்கான ஏலம் இன்று பிற்பகல் 1 மணிக்கு துபாயில் நடக்க இருக்கிறது. இந்த ஏலத்திற்கு பதிவு செய்த 1166 வீரர்களில் 833 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

IPL Auction 2024 Dubai

மேலும், 333 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்கின்றனர். இதில், 214 இந்திய வீரர்கள் மற்றும் 2 அசோசியேட் வீரர்கள் உள்பட 119 வெளிநாட்டு வீரர்கள். இவர்களில் 77 வீரர்கள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட உள்ளனர். இதில், 30 வீரர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL Auction 2024

இந்த நிலையில், தான் 17ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடரானது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில், மார்ச் மாதம் தொடங்கி மே மாதத்திற்குள்ளாக ஐபிஎல் தொடரை முடிக்க திட்டமிடபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

IPL Winners List

டி20 தொடர் வரவுள்ள நிலையில், இந்த ஐபிஎல் தொடர் ஒவ்வொரு வீரருக்கும் முக்கியமானதாக கருதப்படும். எப்படியாவது டி20 தொடரில் இடம் பெற வேண்டும் என்பதற்காக வீரர்கள் தங்களது திறமையை இந்த ஐபிஎல் தொடரில் நிரூபிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் அணிகளின் பர்ஸ் தொகை

பொதுத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் தேதி முடிவு அறிவித்த பின்னரே ஐபிஎல் தொடருக்கான இறுதி தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஐபிஎல் அணிகளின் பர்ஸ் தொகை:

சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ.31.4 கோடி

குஜராத் ஜெயிண்ட்ஸ் – ரூ.38.15 கோடி

டெல்லி கேபிடல்ஸ் – ரூ. 28.95 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ.32.7 கோடி

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் – ரூ. 13.15 கோடி

மும்பை இந்தியன்ஸ் – ரூ.17.75 கோடி

பஞ்சாப் கிங்ஸ் – ரூ.29.1 கோடி

Latest Videos

click me!