IPL 2026: பிளேஆஃப்-க்குள் நுழைந்தது ராஜஸ்தான்! 'டாப் 4' அணிகளின் பிளேஆஃப் அட்டவணை இதோ!

Published : May 24, 2026, 08:40 PM ISTUpdated : May 24, 2026, 08:53 PM IST

IPL 2026:  ஐபிஎல் 2026 தொடரின் ராஜஸ்தான் அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.  முதல் நான்கு அணிகளின் போட்டி அட்டவணை மற்றும் ரூல்ஸை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
16
பிளேஆஃப்-க்குள் நுழைந்தது ராஜஸ்தான்
ஐபிஎல் 2026 தொடரில் முதல் மூன்று இடங்கள் உறுதியான நிலையில், நான்காவது இடத்திற்கு ராஜஸ்தான், பஞ்சாப் கிங்ஸ், KKR, டெல்லி அணிகள் ரேஸில் இருந்தன. ஆனால், KKR மற்றும் டெல்லிக்கு இடையேயான கடைசி லீக் போட்டிக்கு முன்பே ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேஆஃப் சுற்றுக்கு நுழைந்தது.
26
4 அணிகள் என்னென்ன?
RCB, குஜராத் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்தன. இன்று மும்பை அணிக்கு எதிராக 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ், நான்காவது அணியாக பிளேஆஃப்-க்குள் நுழைந்தது. இதனால் KKR மற்றும் DC மோதும் கடைசிப் போட்டி முக்கியத்துவத்தை இழந்துள்ளது.
36
முதல் குவாலிஃபையர் RCB vs GT
புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த RCB மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் முதல் குவாலிஃபையர் போட்டியில் மோதவுள்ளன. இதில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்த ஆட்டம் மே 26 அன்று தர்மசாலா மைதானத்தில் நடைபெறுகிறது.
46
எலிமினேட்டர் SRH vs RR
மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் விளையாடும். இதில் தோற்கும் அணி தொடரிலிருந்து வெளியேறும். வெல்லும் அணி, முதல் குவாலிஃபையரில் தோற்ற அணியுடன் இரண்டாவது குவாலிஃபையரில் மோதும்.
56
பைனல் செல்லப்போவது யார்?

இந்த முறை ஐபிஎல் இறுதிப் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடப்பதாக இருந்தது. ஆனால், சில சர்ச்சைகள் காரணமாக, BCCI இறுதிப் போட்டியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு மாற்றியுள்ளது. இறுதிப் போட்டி மே 31 அன்று நடைபெறும்.

இந்த முறை எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற விவாதங்கள் தொடங்கிவிட்டன. நடப்பு சாம்பியனான RCB அணிக்கு, தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது. ஆனாலும், பிளேஆஃப் சுற்றில் ஆட்டங்கள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

66
மும்பையை RR வீழ்த்தியது எப்படி?

முன்னதாக இன்று மும்பைக்கு எதிரான முக்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு ஆடிய மும்பை அணியால், 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு ஜோஃப்ரா ஆர்ச்சர் முக்கிய காரணமாக இருந்தார். பேட்டிங்கில் 15 பந்துகளில் 32 ரன்கள் விளாசிய அவர், பந்துவீச்சில் 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி மும்பையை நிலைகுலைய வைத்தார். ஆட்டநாயகனாக ஜொலித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories