PBKS vs RCB Qualifier 1 : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்று 2ஆவது இடம் பிடித்ததைத் தொடர்ந்து முதல் குவாலிஃபையர் சுற்று போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
PBKS vs RCB Qualifier 1 : ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இன்னும் 3 நாட்களில் இந்தப் போட்டியும் முடிய இருக்கிறது. ஐஎபிஎல் தொடரில் இடம் பெற்ற 10 அணிகளில் 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இதில், பஞ்சாப் கிங்ஸ் 19 புள்ளிகளுடன் நம்பர் 1 இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 19 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 18 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் மும்பை இந்தியன்ஸ் 16 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளன.
26
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
இதில் நேற்று நடந்த முக்கியமான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஜித்தேஷ் சர்மா பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்தது. இதில் மிட்செல் மார்ஷ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரது சிறப்பான பேட்டிங்கால் லக்னோ 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் குவித்தது.
36
ரிஷப் பண்ட்
என்றும் இல்லாத திருநாளாக ரிஷப் பண்ட் இந்தப் போட்டியில் சதம் விளாசி அசத்தினார். அவர் 61 பந்துகளில் 11 பவுண்டரி 8 சிக்ஸர் உள்பட 118 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதற்கு முன்னதாக இந்த தொடரில் அவர் விளையாடிய 12 போட்டிகளில் மொத்தமே 150 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் எனது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றிருந்த ரிஷப் பண்டிற்கு இந்த சீசன் ஏமாற்றமே மிஞ்சியது.
46
மாயங்க் அகர்வால் மற்றும் ஜித்தேஷ் சர்மா
இந்த தொடரில் லக்னோ விளையாடிய 14 போட்டிகளில் 6 வெற்றி, 8 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடம் பிடித்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய ஆர்சிபி அணியில் விராட் கோலி அரைசதம் அடித்தார். ரஜத் படிதார் 14 ரன்கள் எடுத்து ஏமாற்றினார். இதையடுத்து மாயங்க் அகர்வால் மற்றும் ஜித்தேஷ் சர்மா இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
56
ஜித்தேஷ் சர்மா அரைசதம்
ஜித்தேஷ் சர்மா 33 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்சர் உள்பட 85 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியாக ஆர்சிபி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியலில் 19 புள்ளிகள் பெற்று 2ஆவது இடம் பிடித்தது. நெட் ரன் ரேட் காரணமாக புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்தது. ஏற்கனவே பஞ்சாப் கிங்ஸ் 19 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறது.
66
முதல் குவாலிஃபையர் போட்டி
இதன் மூலமாக 29ஆம் தேதி நாளை நடைபெறும் முதல் குவாலிஃபையர் (தகுதிச் சுற்று) போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி சண்டிகரில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஆர்சிபி 3 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.