IPL 2025 Opening Ceremony at All 13 Venues BCCI Plan : ஐபிஎல் 2025 (இந்தியன் பிரீமியர் லீக்) கிரிக்கெட் திருவிழா தொடங்குவதற்கு முன்னதாக கிரிக்கெ ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் எனப்படும் பிசிசிஐ ஐபிஎல் 2025 தொடருக்கான 18ஆவது சீசனில் 13 இடங்களில் தொடக்க விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
IPL 2025 Opening Ceremony
13 தொடக்க விழா நடத்த ஏற்பாடு:
பணக்கார கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் 2025 திருவிழா இன்னும் ஓரிரு நாட்களில் மிக பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறந்த வீரர்களை கொண்ட உலகின் பணக்கார கிரிக்கெட் லீக்கான ஐபிஎல் 2025 தொடரின் 18ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் பிரம்மாண்ட தொடக்க விழா நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
IPL 2025 Opening Ceremony Celebrities
ஐபிஎல் 2025 தொடக்க விழாவில் பிரபலங்கள்:
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டிக்கு முன்னதாக ஐபிஎல் 2025 தொடக்க விழா நடக்க இருக்கிறது. இதில், பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷ், நடிகை திஷா பதானி, இந்திய ரேப்பர் மற்றும் பின்னணி பாடகரான கரண் அவுஜ்லா ஆகியோர் இசை மற்றும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
Indian Premier League, IPL 2025
இந்த தொடக்க விழாவில் தான் தான் பாலிவுட் பிரபலங்களான சல்மான் கான் மற்றும் ஷாருக் கான் இருவரும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஷாருக்கானின் சொந்த அணி தான் ஐபிஎல் 2025 தொடக்க விழாவில் தங்களது ஹோம் மைதானத்தில் விளையாடுகிறது. அதலால் கண்டிப்பாக ஷாருக்கான் ஐபிஎல் 2025 தொடக்க விழாவில் இடம் பெறுவார் என்று தெரிகிறது.
IPL 2025 Opening Ceremony
13 மைதானங்களில் தொடக்க விழா
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 13 இடங்களில் தொடக்க விழா நடத்த பிசிசிஐ ஏற்பாடுகள் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. மேலும் ஐபிஎல் 2025 தொடரின் 18ஆவது சீசனானது கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை, விசாகப்பட்டினம், அகமதாபாத், கவுகாத்தி, மும்பை, லக்னோ, பெங்களூரு, சண்டிகார், ஜெய்ப்பூர், டெல்லி, தர்மசாலா ஆகிய 13 இடங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த 13 இடங்களிலும் தான் ஐபிஎல் தொடக்க விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
IPL 2025 Opening Ceremony at All Venues
ஐபிஎல் 2012 தொடரின் 10ஆவது சீசனில் 8 இடங்களில் தொடக்க விழா
13 இடங்களில் தொடக்க விழா நடத்தப்படுவது இது முதல் முறையாக இருந்தாலும், ஐபிஎல் 2017 தொடரின் 10ஆவது சீசனின் போது 8 அணிகள் பங்கேற்ற நிலையில், அந்த 8 மைதானங்களிலும் ஐபிஎல் தொடக்க விழா நடத்தப்பட்டது. இந்த நிலையில் தான் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 13 இடங்களில் தொடக்க விழா நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது பிசிசிஐயால் மட்டும் முடியாது. அதற்கு மாநில சங்கங்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.