IPL 2023 Auction: ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு விலைபோன டாப் 10 வீரர்கள்
First Published | Dec 23, 2022, 10:05 PM ISTஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் இன்று கொச்சியில் நடந்தது. இந்த ஏலத்தில் ஆல்ரவுண்டர்களுக்கு அதிகமான கிராக்கி இருந்தது. அதனால் சாம் கரன், பென் ஸ்டோக்ஸ், கேமரூன் க்ரீன் ஆகிய ஆல்ரவுண்டர்கள் தான் அதிக தொகைக்கு விலைபோனார்கள். கேன் வில்லியம்சன் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு விலைபோனார். ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஜோ ரூட்டை ரூ.1 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இந்த சீசனில் சில வீரர்கள் எதிர்பாராத விதமாக அதிகமான தொகைக்கும், சில வீரர்கள் விலைபோகாமலேயும், சில வீரர்கள் குறைவான தொகைக்கும் விலைபோன நிலையில், அதிக தொகைக்கு விலைபோன டாப் 10 வீரர்களை பார்ப்போம்.