இந்த பையன் ஆடுறத பார்த்தா சேவாக்கே லெஃப்ட் ஹேண்ட் பேட்டிங் ஆடுற மாதிரி இருக்கு! இந்திய வீரரை புகழ்ந்த இன்சமாம்

First Published Mar 8, 2021, 4:22 PM IST

ரிஷப் பண்ட் பேட்டிங் ஆடுவதை பார்க்கையில், சேவாக் இடது கையில் ஆடுவது போன்றிருப்பதாக இன்சமாம் உல் ஹக் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, புஜாரா, ரஹானே ஆகிய சீனியர் பேட்ஸ்மேன்களே சொதப்பிய நிலையில், ரிஷப் பண்ட் அபாரமாக ஆடினார். இந்திய அணி 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், களத்திற்கு வந்தார். ரிஷப் பண்ட் வந்த சிறிது நேரத்திலேயே ரோஹித்தும்(49), அஷ்வினும் ஆட்டமிழக்க, 146 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி.
undefined
அப்படியான இக்கட்டான சூழலிலிருந்து, துணிச்சலுடன் தனது வழக்கமான அதிரடி பேட்டிங்கை ஆடி சதமடித்து இந்திய அணியை காப்பாற்றினார் ரிஷப் பண்ட். முதல் அரைசதத்தை 82 பந்தில் அடித்த ரிஷப் பண்ட், அடுத்த அரைசதத்தை வெறும் 33 பந்தில் அடித்தார். 118 பந்தில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 101 ரன்களை குவித்து, ஆட்டத்தின் தலையெழுத்தையே மாற்றியது ரிஷப் பண்ட் தான்.
undefined
ஆஸ்திரேலியாவில் அபாரமாக ஆடி இந்திய அணிக்கு வெற்றி பெற்றுக்கொடுத்த ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிராகவும் அபாரமாக ஆடினார். இந்நிலையில், அவரது அதிரடி பேட்டிங்கை கண்டு வியந்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக், ரிஷப் பண்ட்டை இடது கை சேவாக் என புகழ்ந்துள்ளார்.
undefined
ரிஷப் பண்ட் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய இன்சமாம் உல் ஹக், ரிஷப் பண்ட் அருமையான வீரர். நீண்ட காலத்திற்கு பிறகு அழுத்தத்தை பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடித்து ஆடும் ஒரு வீரரை பார்க்கிறேன். 146 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்துவிட்ட பின்னர் களத்திற்கு வந்த ரிஷப் பண்ட், அவரது இன்னிங்ஸை தொடங்கிய விதம் அபாரமானது. வேறு யாராலும் அது முடியாது. ஸ்கோர் என்ன, பிட்ச்சின் தன்மை என்ன என்றெல்லாம் பார்க்காமல் எல்லா பிட்ச்சிலும், எல்லா சூழலிலும் அடித்து ஆடுகிறார் ரிஷப் பண்ட். ஃபாஸ்ட் பவுலர்கள், ஸ்பின்னர்கள் என அனைத்துவிதமான பவுலர்களையும் ஒரே மாதிரியாகத்தான் எதிர்கொள்கிறார். ரிஷப்பின் பேட்டிங்கை நான் என்ஜாய் செய்து பார்த்தேன். சேவாக் இடது கையில் பேட்டிங் ஆடுவதை போன்றிருந்தது ரிஷப்பின் பேட்டிங்.
undefined
நான் சேவாக்குடன் நிறைய ஆடியிருக்கிறேன். அவரும் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார். எதிரணியின் பவுலிங் அட்டாக் எந்த மாதிரியானது, ஆடுகளத்தின் தன்மை என்ன என்பதை பற்றியெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் அடித்து ஆடுவார் சேவாக். அவருக்கு இவையெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. ஃபீல்டர்கள் பவுண்டரி லைனில் நின்றாலும் கூட, அடித்து ஆடுவார் சேவாக். சேவாக்கிற்கு பிறகு அப்படியான ஒரு வீரரை இப்போதுதான் ரிஷப் பண்ட் ரூபத்தில் பார்க்கிறேன் என்று இன்சமாம் உல் ஹக் ரிஷப்பிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
undefined
click me!