பிட்ச்சை குறை சொல்றத விட்டுட்டு உருப்புடுற வழிய பாருங்க..! இங்கிலாந்து அணிக்கு அக்தரின் அட்வைஸ்

First Published | Mar 7, 2021, 7:44 PM IST

இங்கிலாந்து வீரர்கள் துணைக்கண்டத்தில் ஸ்பின் பவுலிங்கை எதிர்கொள்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஷோயப் அக்தர் அறிவுறுத்தியுள்ளார்.
 

இந்திய அணியை இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் வீழ்த்துவது என்பது மிகக்கடினம். அது, இங்கிலாந்தின் படுதோல்வியின் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. ஸ்பின்னிற்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் தரமான ஸ்பின்னை எதிர்கொள்ளும் திறன் இல்லாத காரணத்தால், அஷ்வின் மற்றும் அக்ஸர் படேலின் சுழலில் சுழன்று 3 டெஸ்ட் போட்டிகளில் படுதோல்வி அடைந்தது இங்கிலாந்து அணி.
இங்கிலாந்து அணி ஆடிய அதே ஆடுகளங்களில் இந்திய அணி நல்ல ஸ்கோர் செய்தது. ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், அஷ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்தனர். ஆனால் அதையெல்லாம் கருத்தில்கொள்ளாமல், இந்திய ஆடுகளங்களின் குற்றம்சாட்டி, கடும் விமர்சனங்களை முன்வைத்தனர் இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் மைக்கேல் வான், டேவிட் லாய்ட் போன்ற சிலர்.
Tap to resize

இந்நிலையில், இங்கிலாந்து அணி அடைந்த படுதோல்வி குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர், இங்கிலாந்துக்கு படுதோல்வி இது. இங்கிலாந்து அணி எதார்த்தத்தை புரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்த டெஸ்ட் தொடர் இது. துணைக்கண்டத்தில் ஸ்பின் பவுலிங்கை திறம்பட ஆட இங்கிலாந்து வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்திய ஆடுகளங்களை இங்கிலாந்து விமர்சிக்கிறது. ஆனால் அதே ஆடுகளத்தில் தான் இந்திய அணி 365 ரன்கள் அடித்தது. இங்கிலாந்து வீரர்கள் சொதப்பிய அதே ஆடுகளத்தில் தான் இந்திய வீரர்கள் அருமையாக ஆடினர். ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரால் ஸ்கோர் செய்ய முடியுமென்றால், இங்கிலாந்து வீரர்களால் ஏன் முடியாது? என்று அக்தர் கேள்வியெழுப்பினார்.

Latest Videos

click me!