தோனி கேப்டன் ஆனதற்கு அவருதான் காரணம்; அவரு சொன்னதால் தான் கேப்டன்சியை கொடுத்தோம் - பிசிசிஐ முன்னாள் தலைவர்

First Published Mar 8, 2021, 3:24 PM IST

தோனி இந்திய அணியின் கேப்டன் ஆனதற்கு யார் காரணம் என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் ஷரத் பவார் தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. 2004ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் அறிமுகமான தோனி, 2007ம் ஆண்டே இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் ஆனார். அதற்கடுத்த ஆண்டே டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பையும் ஏற்றார்.
undefined
தோனியின் கேப்டன்சியின் கீழ், ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டி20 உலக கோப்பை என மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் இந்திய அணி வென்றுள்ளது. 3 ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்கார கேப்டன் தோனி.
undefined
நெருக்கடியான சூழல்களிலும் பதற்றப்படாமல், நேர்மறையான சிந்தனையோடு வீரர்களை ஊக்கப்படுத்தி வெற்றியை வசப்படுத்துவதால் கேப்டன் கூல் என தோனி அழைக்கப்பட்டார். 2017ம் ஆண்டு கேப்டன்சியிலிருந்து ஒதுங்கிய தோனி, கடந்த ஆண்டு ஓய்வு அறிவித்தார்.
undefined
இந்நிலையில், ராகுல் டிராவிட் 2007 ஒருநாள் உலக கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். தோனியை கேப்டனாக்க பரிந்துரைத்தது யார் என்று, அந்த காலக்கட்டத்தில்(2005-2008) பிசிசிஐ தலைவராக இருந்த ஷரத் பவார் தெரிவித்துள்ளார்.
undefined
இதுகுறித்து ஸ்போர்ட்ஸ்கீடாவிற்கு பேசிய ஷரத் பவார், 2007ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, நானும் அங்குதான் இருந்தேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.. அப்போது என்னை பார்க்க வந்த அப்போதைய கேப்டன் ராகுல் டிராவிட், கேப்டன்சி அவரது பேட்டிங்கை எவ்வாறு பாதிக்கிறது என்பதை என்னிடம் எடுத்துரைத்து, கேப்டன்சியிலிருந்து விலக விரும்புவதாக கூறினார்.
undefined
நான் உடனே சச்சினை கேப்டன்சி பொறுப்பை ஏற்க வலியுறுத்தினேன். ஆனால் அவரும் மறுத்தார். நீங்கள் இருவருமே(சச்சின், டிராவிட்) கேப்டன்சியை மறுத்தால், யாரை கேப்டனாக்குவது என்று நான் கேட்க, நம் அணியில் கேப்டன்சிக்கு தகுதியான மற்றுமொரு நபர் இருக்கிறார் என்று தோனியின் பெயரை சொன்னார். தோனியை கேப்டனாக்கலாம் என சச்சின் கூறியதாலேயே தோனியிடம் கேப்டன்சியை கொடுத்தோம் என்று ஷரத் பவார் தெரிவித்தார்.
undefined
click me!