ஏறுக்கு மாறா பயிற்சி செய்ய சொல்லும் கோலி,சாஸ்திரி டி20,ஒருநாள் விட்டு டெஸ்ட் போட்டி நிலைக்கு பயிற்சி ரூட் சேஞ்

First Published Nov 20, 2020, 10:05 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் முதலில் விளையாட இருந்தாலும், கடைசியாக நடைபெற உள்ள டெஸ்ட் தொடருக்கு முக்கியத்துவம் அளிப்பதாக தெரியவந்துள்ளது.
 

இந்தநிலையில், 3 வடிவ தொடர்களுக்கான அணியில் இடம்பிடித்துள்ள பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் அனைவருமே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான பயிற்சியில் பங்கேற்று வருகின்றனர்
undefined
வழக்கத்துக்கு மாறாக வலைப்பயிற்சியை தவிர்த்து, மைதானத்தின் மைய ஆடுகளத்தில் சிவப்பு மற்றும் பிங்க் நிற பந்துகளைக் கொண்டு, அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். மேலும், நான் ஸ்டிரைக்கர் பகுதியில் ஒரு பேட்ஸ்மேனையும் வைத்து பயிற்சி செய்தனர்
undefined
பல மாதங்களாக எந்தப் போட்டியிலும் கலந்துகொள்ளாமல், கடந்த 2 மாதங்களாக ஐபிஎல் போட்டியில் மட்டுமே விளையாடினர்.இதனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பயிற்சியைத் தவிர்த்து டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது
undefined
டெஸ்ட் தொடருக்கு முன் இந்திய வீரர்களுக்கு அதற்கு ஏற்ற சூழ்நிலையில் ஆட நீண்ட பயிற்சி அவசியம் என்பதால், தற்போது அனைத்து வீரர்களையுமே, டெஸ்ட் போட்டியின் பயிற்சியில் ஈடுபடுத்தலாம் என்று கேப்டன் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி திட்டம் வடிவமைத்ததாக கூறப்படுகிறது.
undefined
இதன் மூலம், இந்திய வீரர்கள் தங்களுக்குள்ளே இரு அணிகளை பிரித்துக் கொண்டு பயிற்சி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது
undefined
click me!