சேவாக், நான் போலீஸ் ஜீப்புல மொகத்தை மறச்சு தீவிரவாதி மாதிரி ஸ்டேஷன்க்கு போனோம் மோசமான சம்பவத்தை பகிர்ந்த தோனி

நாங்கள் 2007ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் தோற்று வெளியேறிய போது விமானம் மூலம் டெல்லிக்கு வந்து சேர்ந்தோம். இந்தியா முழுவதும் அது ஒரு கொந்தளிப்பான நேரமாக பார்க்கப்பட்டது
 

விமான நிலையத்திலிருந்து போலீஸ் வாகனத்தில் வந்த நாங்கள் மாலை நேரத்தில் சாலைகளில் செல்லும்போது போலீஸ் வேனில் இடது பக்கத்தில் சேவாக் அருகில் நான் அமர்ந்து இருந்தேன்
ஒரு குறுகிய சாலையின் வழியாக வேன் சென்றபோது எங்களை மீடியா வாகனங்கள் சுற்றி வளைக்க முயன்றது. அப்பொழுது நாங்கள் ஒரு குற்றவாளியை போலவும் தீவிரவாதியை போலவும் உணர்ந்த நேரம்.

பின்னர் எங்களை மீடியா வாகனங்கள் பின் தொடர்ந்து வந்ததால் இறுதியில் ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு நுழைய வேண்டிய வேலை ஆகியது. அதன்படி நாங்கள் அனைவரும் ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து 20 நிமிடம் வரை அங்கேயே இருந்தோம்
பின்னர் எங்களது கார்களில் நாங்கள் தனித்தனியே சென்றோம் என்று தோனி கூறியுள்ளார். மேலும் என்னுடைய மனதில் இது ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
அந்த ஒரு தருணம் தான் என்னை சிறந்த கிரிக்கெட் வீரராகவும், ஒரு நல்ல மனிதராக உருவாக்கியது என்று டோனி கூறியுள்ளார். அதன் பின்னர் இந்திய அணிக்கு தேவை என்ன என்பதை உணர்ந்த தோனி சரியாக அணியை கட்டமைத்து பல வெற்றிகளை குவித்து காட்டினார்

Latest Videos

click me!