ஸ்கூல்ல கூட சஸ்பெண்ட் ஆகல, கிரிக்கெட்டில் சஸ்பெண்ட் ஆனா கேஎல் ராகுல் உண்மை காரணம் என்ன.?

First Published | Aug 26, 2024, 11:45 AM IST

KL Rahul: 5 ஆண்டுகளுக்கு முன்பு, நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா இருவரும் பிரபலமான டாக் ஷோ 'காபி வித் கரண்'நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பெண்கள் குறித்து அவர்கள் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த 2 வீரர்களுக்கும் ரூ.20 லட்சம் அபராதம் விதித்ததுடன் பிசிசிஐ இடைநீக்கம் செய்தது.

Koffee With Karan, KL Rahul and Hardik Pandya

KL Rahul: பிரபலமான டாக் ஷோ 'காபி வித் கரண்'-நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய சர்ச்சை தன்னை மிகவும் பாதித்ததாக இந்திய அணியின் சீனியர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். தனது வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் வேதனையான தருணங்களை அப்போது அனுபவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

KL Rahul and Hardik Pandya Controversy

மேலும், காபி வித் கரண் நேர்காணல் மிகவும் வித்தியாசமானது என்றும் குறிப்பிட்டுள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன்பு, கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா இருவரும் பாலிவுட் படத் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கிய டாக் ஷோ நிகழ்ச்சியான காபி வித் கரண்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பெண்கள் குறித்து அவர்கள் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Tap to resize

KL Rahul Controversy at Koffee with Karan

இருவரையும் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்தனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) கடும் அதிருப்தி தெரிவித்தது. இந்த 2 வீரர்களுக்கும் ரூ.20 லட்சம் அபராதம் விதித்தது. அத்துடன், இந்திய அணியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கமும் செய்தது. இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கேஎல் ராகுல், அந்த டாக் ஷோவில் கலந்து கொண்ட பிறகு சில நாட்கள் தனது வாழ்க்கையில் மிகவும் வேதனையானதாக மாறியதாகத் தெரிவித்தார்.

KL Rahul

ஏனென்றால், தனது வாழ்க்கையில் இதுவரை இடைநீக்கம் செய்யப்பட்டதில்லை என்றார். பள்ளி நாட்களில் கூட தன்னை ஒருபோதும் இடைநீக்கம் செய்யவில்லை என்றும், எனவே இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து தனது இடைநீக்கத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்று தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் விளக்கினார்.

KL Rahul and Hardik Pandya

எனவே அந்த நாட்கள் தனக்கு மிகுந்த பயத்தையும், வேதனையையும் அளித்ததாக கேஎல் ராகுல் குறிப்பிட்டார். 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பாலிவுட் படத் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கிய இந்த டாக் ஷோவில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுடன் கேஎல் ராகுலும் இடம் பெற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் பாண்டியா சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததால் இருவருக்கும் அபராதம் மற்றும் இடைநீக்கம் விதிக்கப்பட்டது.

KL Rahul and Hardik Pandya

ராகுல் சுயமாக எந்த சர்ச்சைக்குரிய கருத்துகளையும் கூறவில்லை என்றாலும், அவரது பதில்கள் பாண்டியாவின் கருத்துக்களுக்கு ஆதரவாக இருந்ததால் இருவருக்கும் தடை விதிக்கப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு இருவரும் அணிக்குத் திரும்பினர். ஆனால், அந்த சம்பவம் தன்னை மிகவும் பாதித்ததாக கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். 

KL Rahul and Hardik Pandya

நிகில் கமத் யூடியூப் சேனலில் பேசிய கேஎல் ராகுல், 'காபி வித் கரண் நேர்காணல் முற்றிலும் வேறுபட்ட உலகம். அது என்னை மாற்றியது. நான் மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட, மென்மையாகப் பேசும் பையன். அதன் பிறகு இந்தியாவுக்காக விளையாடினேன், அதன் பிறகு 3, 4 ஆண்டுகள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் விளையாடினேன். பெரிய கூட்டத்தில் இருப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

KL Rahul and Hardik Pandya

நான் 100 பேருடன் ஒரு அறையில் இருந்தால், அனைவரிடமும் பேசுவேன் என்பது மக்களுக்குத் தெரியும். இப்போது நான் அதைச் செய்யமாட்டேன், ஏனென்றால் அந்த நேர்காணல் என்னை மிகவும் பாதித்தது. அணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டேன். என்னைப் பள்ளியில் ஒருபோதும் இடைநீக்கம் செய்யவில்லை, ஒருபோதும் தண்டிக்கவில்லை. அதை எப்படி கையாள்வது என்று எனக்குத் தெரியவில்லை' என்று கேஎல் ராகுல் கூறினார்.

KL Rahul

சர்ச்சைக்குரிய அந்த 'காபி வித் கரண்' எபிசோடில் உறவுகள் மற்றும் காதல் குறித்து வெளிப்படையாக விவாதிக்கப்பட்டது. இதனால் சர்ச்சை வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!