Yuvraj Singh and MS Dhoni Friendship: தோனி - யுவராஜ் சிங் ஃப்ரண்ட்ஷிப்: பிரிவிற்கான மர்மம் என்ன?

First Published | Aug 25, 2024, 9:39 PM IST

கிரிக்கெட்டில் ஜிகிரிதோஸ்தாக இருந்த தோனி மற்றும் யுவராஜ் சிங் ஒரு கட்டத்தில் பிரிந்தனர். இதற்கான காரணம் என்ன என்று பார்க்கலாம்.

Yuvraj Singh and MS Dhoni Friendship

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல் தொடர்களில் இடம் பெற்று விளையாடி வருகிறார். 2025 அல்லது 2026 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரிலிருந்து தோனி ஓய்வு பெறுவார் என்று தகவல் வெளியாகி வருகிறது. கிரிக்கெட்டில் ஜிகிரிதோஸ்தாக இருந்த தோனி மற்றும் யுவராஜ் சிங் ஒரு கட்டத்தில் பிரிந்தனர். இதற்கான காரணம் என்ன என்று பார்க்கலாம் வாங்க.

MS Dhoni and Yuvraj Singh Friendship

கிரிக்கெட்டில் அசைக்க முடியாத உச்சம் தொட்டவர் மகேந்திர சிங் தோனி. நீண்ட தலைமுடி வைத்துக் கொண்டு ஒரு சாதாரண விக்கெட் கீப்பராக இந்திய அணியில் இடம் பிடித்தார். ஆரம்பத்தில் ஒரு சில போட்டிகளில் தோற்று வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா என்ற நிலையில் இருந்தார். அதன் பிறகு அதிரடியாக விளையாடி தான் யார் என்பதை நிரூபித்து காட்டி இன்று உலகமே கொண்டாடும் ஒரு ஹீரோவாக திகழ்கிறார்.

Tap to resize

MS Dhoni

கிரிக்கெட் மீதான காதல், புத்தி கூர்மை, டிஆர்எஸ் எடுக்கும் முறை, வீரர்களை கையாளும் முறை, பீல்டிங் செட்டப், பவுலர்கள் மாற்றம் என்று தனது கிரிக்கெட் நுட்பத்தின் மூலமாக இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்று கொடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 5 முறை டிராபி வென்று கொடுத்துள்ளார்.

Yuvraj Singh -Dhoni

தோனி களத்தில் நிற்கிறார் என்றால் அவருக்கு பந்து வீச ஒரு பவுலர் பிறந்து தான் வர வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் கூட குறைவான பந்துகளில் அரைசதம் விளாசி வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாராவையே அதிர வைத்தார். அவருக்கு பந்து வீச முடியாது என்று மைதானத்திலிருந்து புறப்பட்ட காட்சியும் கண் முன்னே நிற்கிறது.

Yuvraj Singh

இது ஒரு புறம் இருக்க கிரிக்கெட்டில் தோனியின் சிறந்த நண்பனாக யுவராஜ் சிங் இருந்து வந்துள்ளார். பல போட்டிகளில் தோனி மற்றும் யுவராஜ் சிங் இருவரும் இணைந்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் யுவி மற்றும் தோனி இருவரும் இணைந்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தனர்.

Yuvraj Singh

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் யுவராஜ் சிங்கிற்கு தொடர் நாயகன் விருதாக பைக் பரிசாக வழங்கப்பட்டது. அதில், யுவராஜ் சிங் மற்றும் தோனி இருவரும் மைதானத்தில் வலம் வந்தனர். தோனி தான் அந்த பைக்கை ஓட்டிச் சென்றார்.

Yuvraj Singh and MS Dhoni

அந்தளவிற்கு இருவரும் நண்பர்களாக இருந்தனர். ஆனால், ஒரு சில காரணங்களால் அவர்களுக்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இவர்களுக்கு இடையிலான பிணைப்பை யாராலும் மாற்ற முடியாது. 

Latest Videos

click me!